இந்தியாவோட நம்பிக்கை நட்சத்திரமா ஒலிம்பிக்ல விளையாடிட்டு இருந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்த 100 கிராம் எடை கூடுனதுக்கு தகுதி நீக்கம் பண்ணிருக்காங்க…
இத பத்தி ரொம்ப வேதனையோட பேசிட்டு இருந்தாரு டீக்கட மாஸ்டர் பாலு…
நானும் அவர்ட்ட உச் கொட்டிக்கிட்டே… ”இது எந்த அளவுக்கு நியாயம்னு தெரில மாஸ்டர்… ரொம்ப கஷ்டமா தான் இருக்கு”னு சொன்னேன்.
அப்போ குறுக்க வந்த கணேசன்.. ”இதே மாறி டீ போடுற போட்டி வச்சா உங்கள முதல்ல டிஸ் குவாலிஃபைடு பண்ணிருவாங்கனு சொன்னான்.
எதுக்கு கேட்டதுக்கு, “ஆமா நீங்க தான் எப்பவும் பாலுக்கு பதிலா 100 மில்லி தண்ணிய அதிகமா சேத்துருறாரு… அதனால தான்”னு சொல்லி சிரிக்குறான்… மாஸ்டருக்கு லைட்டா கண்ணு செவக்குது…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
தங்கம் வெல்ல வேண்டும் என்பது
கோடிக்கணக்கான பேரின் விருப்பம்
ஜெயிக்க கூடாது ன்னு அதில் 100 கிராம்
சேதாரம் சேர்ப்பது சிலரின் விருப்பம்
Sivakumar
பிக் பாஸில் இருந்து விலகினார் கமல்
அப்போ ‘பிக் பாஸ்’ இனி ‘ நோ பாஸா?’
Sasikumar J
LKGல படிச்ச ABCD இன்னும் ஞாபகம் வச்சு வச்சிருக்கிறதும்..!
போன வாரம் ஆபீஸ்ல சேஞ் பண்ண சிஸ்டம் பாஸ்வேர்டை ஞாபகம் இல்லாமல் மறந்து போறதும் ஒரே ஆளா…!!
குருநாதா
My weighing machine:
நாளு நாள் நடந்துட்டு
சும்மா சும்மா வெயிட் செக் பண்ண வேணாம்…
balebalu
பாலியல் கொடுமைக்கு நீதி கேட்டா மட்டும் தாங்க கண்டுக்க மாட்டோம்
மத்தபடி பதக்கம் வாங்கினா உடனே தாராளமா பாராட்டிடுவோம்
ச ப் பா ணி
ரகசியம் என்பது உனக்கு ஒன்னு தெரியுமா என்று சொல்ல ஆரம்பிப்பது
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வினேஷ் போகத் தகுதி நீக்கம்.
# பணம் பாதாளம் வரை பாயும், அதிகார வர்க்கம் உடன் சேர்ந்தால் பாரிஸ் வரை பாயும்.
ArulrajArun
இருட்டிலும் எனக்கு எருமை மாடு பளிச்சின்னு தெரியும் என்று சொல்ற மாதிரி இருக்கு இப்போ இருக்கிற அரசியல்வாதிகளின் பேச்சு
Niranjan kumar
கண்ணீரை துடைக்காத
கைகளுக்கு சாதனைகளின் போது
கை குலுக்க வர எந்த அருகதையும்
கிடையாது!!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
ஆம்ஸ்ட்ராங் கொலை : கைதான அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல்!
செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்ப்படுத்தவில்லை என்றால்… : நீதிமன்றம் எச்சரிக்கை!