இன்னைக்கு காலையில அக்கா பையன் நியூஸ் சேனல் பார்த்துக்கிட்டு இருந்தான்.
இவன் அவ்வளவு நல்லவன் கிடையாதேன்னு சந்தேகத்தோடவே, “என்னடா காலையிலேயே நியூஸ் பார்க்குறன்னு” கேட்டேன்.
‘இல்ல மாமா… மழை வந்துட்டு இருக்குல்ல, லீவ் உண்டான்னு செய்தியில பார்த்துக்கிட்டு இருக்கேன்னு” சொன்னான்.
“கொஞ்ச நேரத்துல சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்னு” பிரேக்கிங் போட்டாங்க…
“பார்த்தியா.. முன்னெல்லாம் லீவ் இருந்தாதான் பிரேக்கிங் போடுவாங்க… உன்ன மாதிரி ஆளுங்களுக்காக லீவ் இல்லங்குறத ஒரு பிரேக்கிங் செய்தியா போட வேண்டியிருக்கு” சொன்னேன்.
சைலன்ட்டா ஸ்கூல் கிளம்பி போயிட்டான்.
திருப்பூர் சாரதி
மழையில் ரயில்கள் ஒழுகுகின்றன என்று பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது…
பாராளுமன்றமும் ஒழுகிக்கொண்டிருந்தது!
Mannar & company
வேலை இல்லாதவனுக்கு திங்கட்கிழமையும் ஞாயிற்றுக்கிழமைதான்,
வேலைக்குப் போறவனுக்கு ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமைதான்!
Kirachand
இப்படி நடக்கும்னு ‘நானே’ எதிர்பார்க்கல என்று சொல்வது கூட தற்பெருமைதான்!
Mannar & company™????
12thல Biology Group எடுத்து Mechanical Engineering காலேஜில் படிச்சிட்டு ITல வேலை பார்த்துகிட்டே TNPSC Goverment வேலைக்கு தேர்வு எழுதுறது எல்லாம் ஒரே ஆளா..?!
கோழியின் கிறுக்கல்!!
பின்புற கார் கண்ணாடியை குடும்ப உறுப்பினர்கள் பெயரை எல்லாம் எழுதி,
ரேஷன் கார்டு மாதிரி பயன்படுத்துறாங்கப்பா!!
ச ப் பா ணி
உச்ச நடிகர்களுக்கு போட்டியாக மீண்டும் வருவார் பிரஷாந்த்..
#சார்…அந்தகன் இன்னும் வரல
செங்காந்தள்
அவரை ஏன் அண்ணே அடிக்கிறீங்க?
ஷேக் ஹசீனாவிற்கு சொந்த விமானம் இல்லையானு கேட்கிறான்
Mannar & company™????
மதுரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு ஒரே நாளில் 8.72 கோடி வருவாய்!
ஆடிப்பெருக்கு மாதிரி இது “கோடிப்பெருக்கு” போலிருக்கு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
ஒலிம்பிக்ஸ் 2024:டேபிள் டென்னிஸ் காலிறுதிக்குள் நுழைந்த இந்தியா!!!