தாத்தா ரீ என்ட்ரி: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நண்பன் ஒருத்தனோட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்.
நண்பன், “தாத்தா மறுபடியும் வரப்போராரு தெரியுமான்னு” கேட்டான்.
“எந்த தாத்தாவ சொல்ற?”
“அட நம்ம இந்தியன் தாத்தா டா… நெட்பிளிக்ஸ்ல ஆகஸ்ட் 9 ரிலீஸ் ஆகப்போகுதுன்னு” சொன்னான்.
“ஏன்டா… தியேட்டர்லையே அந்த படத்த பாக்க முடியாம தெறிச்சு ஓடிட்டானுங்க. இனி வீட்லையும், டிவியிலையும் அந்த படத்தைப் போட்டா யாரேல்லாம் கதறப்போறாங்களோன்னு” கமெண்ட் அடிச்சேன்.
அப்புறம், மாஸ்டர் கிட்ட டீ குடிச்சதுக்கு பைசாவ கொடுத்துட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை வாழ்க்கைக்கு
“நண்பர்களை”!

ArulrajArun
வாழ்க்கையில நமக்கு நடக்குற தர்மசங்கடமான நிலைமை எதுனா நம்ம அக்கவுண்ட்ல 400 ரூபாய் இருந்தும் நாம பணம் எடுக்க போற ஏடிஎம் ல 500 ரூபாய் மட்டும் தான் வரும்னு வர்ற Situation தான்

நெல்லை அண்ணாச்சி
970 ரூ கோடி நாடாளுமன்றமும், 120 ரூ plastic வாளியும்…!!!!
குருநாதா
என்னடா கப்பல்ட்ட போய் “ஹாப்பி ப்ரண்ட்ஷிப் டே”னு
சொல்லிட்டு இருக்க? மூழ்க்காத ஷிப் ப்ரண்ட்ஷிப் ண்ணே

ச ப் பா ணி
எங்க இருக்கேனு போனில் கேட்டவனுக்கு..
ஆன்லைன்ல இருக்கேனு சொன்னேன்.வச்சிட்டான் போனை

கடைநிலை ஊழியன்
ஒன்னும் கவலை படாதீங்க.. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது..
அந்த கிடைக்கிற லிஸ்ட் ல ஏதாவது இருக்கா னு மட்டும் பாத்து சொல்லுங்க டா..

செங்காந்தள்
சாக்லேட்டுகள் நிறைய பல் டாக்டர்களை உருவாக்குகிறது…!!!

ச ப் பா ணி
விமானத்தில் ஒரு சின்ன தூசி பட்டாலும் வெடித்து விடும்
#80கிட்ஸ்

தர்மஅடி தர்மலிங்கம்
எல்லாவற்றையும் மறக்க டீ குடிங்க, நீங்க குடிச்ச டீக்கு கொடுக்க வேண்டிய காசுகள் உட்பட!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வருசம் முழுக்க போன் செய்தால், எடுத்து பேச கூட மாட்டான், Friendship day க்கு மட்டும் காலங்காத்தால பல்லு கூட விளக்காம வாட்சப் மெசேஜ் பார்வேர்டு செய்வான். அவன் யார்..?
All of my friends: நான்தாங்க..

Writer SJB✒️
ஆடி மாசம் ஏன் கல்யாணம் பண்றது இல்ல தெரியுமா..?
ஏன்…?
ஒன்னு வாங்குனா ஒன்னு ப்ரீயா தரணும் அதனாலதான்…!!!

கோழியின் கிறுக்கல்!!
அமாவாசை “ஆடி”ட்டு வந்தாலும் “ஆடாம” வந்தாலும்,
ஞாயிறு கறிச்சோறு தான்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

கலைஞர் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: ஸ்டாலின் கடிதம்!

சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share