அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்வீட்டுகளை இன்றைய அப்டேட் குமாரில் பார்க்கலாம்

balebalu

தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் எய்ம்ஸ் தாமதம் ஆகிறது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டா விளக்கம்
மற்ற மாநிலத்துல எல்லாம் இதே தொழில் நுட்ப கோளாற எப்படி சமாளிச்சு சீக்கிரம் கட்டினீங்க ஆபீசர்

Kirachand
சொகுசான குஷன் சேர்… மிதமான ஏசி…முடி வெட்டுபவரின் கனிவான ஸ்பரிசம்… இனிமையான இளையராஜாவின் இசையை ரசித்துக் கேட்டுக்கொண்டே கண் மூடி இருக்கும் சலூன் கடையும் ஒரு சொர்க்கலோகம்தான்!

கடைநிலை ஊழியன்
என்ன ஒரு ரெண்டு நாளா, இந்த ப்ளூ டிக் id எல்லாம் அமைதியா இருக்காங்க..
என்னவா இருக்கும்.. ?

ச ப் பா ணி
உங்களுக்கு நான் முக்கியமா?
உங்க அம்மா முக்கியமா?
ஆண்கள் எதிர்கொள்ளும் யார்க்கர் பந்து ..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரசாந்துக்கு ரூ.1000 அபராதம்
அபராதம் கட்டிய அந்தகன் ஹீரோவிற்கு வாழ்த்துக்கள் – அந்தகன் படக்குழு.

கோழியின் கிறுக்கல்!!
படிப்பு பற்றி கேட்டால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் ப்ரைவேட் பஸ் மாதிரியே மெதுவா பதில் வரும்,
அதே படத்தை பற்றி கேட்டால் பைபாஸ்ல பறக்கும் ப்ரைவேட் பஸ் மாதிரி வேகமா பதில் வரும்!!


Niranjan kumar
ஒழுகாத கட்டிடத்தில்
என்றென்றும் காப்பேன் உன்னை…

ச ப் பா ணி
வேலை விட்டு வீட்டுக்கு வர்றேன்னு தெரிஞ்சா போதும்

ப்ராஜெக்ட் செய்ய கம்மு வேனும், சாட் வேனும், ஸ்நாக்ஸ் வேனும்னு உசுர வாங்குறாங்கய்ய்யா

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமருக்கு வரலாறு கிடையாதா? சிவசங்கருக்கு அண்ணாமலை பதில்!

நெருங்கும் மழைக்காலம்… சாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் வேலு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share