உசுரே நீ தானே… நீ தானே: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு காலையில 12 மணியில இருந்து 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை நண்பன் அடிக்கடி மொபைலை பார்த்துக்கிட்டே இருந்தான்.

”என்னடா ஏதாவது பிரச்சனையான்னு” கேட்டேன்.

ADVERTISEMENT

”இல்லை மாப்ள… எப்போதும் 12ல இருந்து 1 மணிக்குள்ள சேலரி கிரிடிட் ஆகிரும். இன்னைக்கு இன்னும் வரலைன்னு” சொன்னான்.

நேரம் ஆக ஆக ஒவ்வொருத்தர்கிட்டையும் போய் சேலரி வந்துருச்சா, வந்துருச்சான்னு கேட்டுக்கிட்டே இருந்தான்.

ADVERTISEMENT

ஏழு மணி வாக்குல சிலருக்கு சேலரி வந்ததும், மொபைலை செக் பண்ணி பார்த்தான். அவனுக்கு இன்னும் கிரிடிட் ஆகலை.

இன்னைக்கு சரக்கு அடிக்க முடியாது என்ற சோகத்தின் எல்லைக்கே சென்ற நண்பனுக்கு, இரவு 9 மணிக்கு போல சேலரி கிரிடிட்னு ஆறுதல் மெசேஜ் வந்துச்சு…

ADVERTISEMENT

நண்பன், “இப்போது தான் எனக்கு உசுரே வந்துருக்குன்னு” சொன்னான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
தோல்வியை வெற்றிப் படிக்கட்டுகளாக நினைக்கணும் சொல்றாங்களே… அப்படின்னா வெற்றியை தோல்விப் படிக்கட்டுகளா நினைக்கணுமான்னு கேட்கிறாம்பா!

Sasikumar J
மடிந்தது யார் என்று தெரியாதவருக்கும் மலர் தூவும் மானிடர்கள் இருக்கும் வரை மண்ணில் மனிதநேயம் மலர்ந்து கொண்டே தான் இருக்கும்…!
#keralaflood

கடைநிலை ஊழியன்
பிரசாந்த் நவ் –
இருங்கடா அந்தகன் படம் மட்டும் ரிலீஸ் ஆகி ஹிட் ஆகட்டும்..
அப்பறம் பாருங்க.. நா யாரு னு காட்டுறேன்..

ArulrajArun
வைராக்கியமாக வாழ கற்று கொடுக்கிறது – மாச கடைசி

கடைநிலை ஊழியன்
மாசம் பிறந்ததும், வந்துருச்சு மாமா..
சம்பளம்மா மாப்ள.. ?
செலவு மாமா..

ச ப் பா ணி
சோதனையும் சாதனைதான் என்பது..வருமான வரிச் சோதனைக்குப் பொருந்தாது

மயக்குநன்
இந்திய- சீன எல்லைப் பிரச்சனையில் எந்த நாடும் தலையிடுவதை விரும்பவில்லை!- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.
குறிப்பா… சீனா தலையிடுறதை சுத்தமா விரும்பலைங்கிறதை அடிச்சு சொல்லுங்க ஜீ..!

பாக்டீரியா
கடன் இல்லாத Life, Weekend Leave, மாசத்தில ஒரு தடவை Friends கூட Trip, கொஞ்சம் Savings இருந்தா போதும் என்னோட உலகத்த உருவாக்கிக என்னால முடியும்…!

கோழியின் கிறுக்கல்!!
ஊதினால் பெரிதாக வேண்டும் என்ற விதிக்கு மாறாக,
சிகரெட் ஊதினால் நுரையீரல் சுருங்கவே செய்கின்றது!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உண்டா, இல்லையா? கேட்டவரிடம் ஸ்டாலின் சொன்ன பதில்!

ஆசியாவிலேயே முதன்முறை… வியக்க வைக்கும் சென்னை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share