உதயநிதியின் கொசுவத்தி: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

என்னப்பா எல்லா இடத்துலயும் டெங்கு பரவிக்கிட்டிருக்காமே, குழந்தைங்களை ஜாக்கிரதையா பாத்துக்கங்கப்பானு டீ குடிக்கும்போது மாஸ்டர் சொன்னாரு. டெங்குவுலேர்ந்து தப்பிக்க ஒரு ஈசியான வழி இருக்குனு  கூட வந்த ஒரு உடன்பிறப்பு சொன்னாப்ல… என்னானு ரொம்ப ஆர்வமா கேட்டேன். ‘எங்க உதயா அண்ணன் கொசுவத்தி ஸ்டேட்டஸ் போட்டிருக்காரு. உங்க செல்போன்ல அதை ஷேர் பண்ணா கொசு உங்க வீட்டுக்கு வராது’னு சொல்லிட்டு போயிட்டாப்ல.
அவங்க அப்படித்தான் நீங்க அப்டேட் பாருங்க

ADVERTISEMENT

நெல்லை அண்ணாச்சி
நேற்று…ஈரோடு கோர்ட்
இன்று வளசரவாக்கம் காவல் நிலையம்….சீமான்
# நான் …ரொம்ப…பிஸி


வசந்த்
அந்த காலத்து பெண்கள்னா உடன்கட்டை தான் நியாபகத்துக்கு வரும் இப்ப உள்ள பெண்கள்னா பூரி கட்டையால அடி வாங்குனது தான் நியாபகம் வருது.
கடைநிலை ஊழியன்
மச்சான்.. ரொம்ப ஸ்ட்ரெஸ் ஸா இருக்கு.. ப்ரேக் போயிட்டு அப்படியே கேன்டீன் பக்கம் போயிட்டு வருவோமா..
உனக்கு இப்ப பப்ஸ் சாப்பிடணும்.. அதான..

ADVERTISEMENT


ℳsd ❝இதயவன்❞
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையினருக்கு காவி உடை சீருடையாக வழங்கப்படும்!’ – எச்.ராஜா
அப்ப அறநிலையதுறைக்கு காக்கி உடை கொடுப்பீங்களா ?!
ச ப் பா ணி
சரி சரி நான் செஞ்சதெல்லாம் மறந்திடு என்பதன் நாகரீக வெர்ஷனே
“பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்”


தர்மஅடி தர்மலிங்கம்
இந்தியா’ கூட்டணி நினைத்தால், நான்கூட பிரதமராகலாம்!” – சி.பி.ஐ முத்தரசன்!
ஆசை தான்… ஆனா, அவங்க நினைக்கனுமில்ல.?!
கடைநிலை ஊழியன்
ஒரே கூட்டம் சார்.. உள்ள போகவே முடியல.. concert ஒருங்கவே பிளான் பண்ணல சார்..
எவ்ளோ ரூபாய் டிக்கெட் சார் நீங்க..
டிக்கெட் டா.. concert க்கு தண்ணி கேன் போட வந்தவன் சார் நானு..

ADVERTISEMENT

Ananth Ananth
ரயில் வர இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. ஒரு இந்து பேப்பர், ஒரு பாக்கெட் மேரி கோல்ட் பிஸ்கட் வாங்கி வந்து பெஞ்ச்சில் அமர்ந்தாள் சாரதா. பக்கத்தில் ஒரு முரட்டு ஆசாமி வந்து உட்கார்ந்தான்.
அவள் பேப்பர் படித்துக் கொண்டே பிஸ்கெட் பாக்கெட்டை திறந்து பக்கத்தில் வைத்தாள். ஒன்று எடுத்து வாயில் வைத்தாள். அவனும் அதிலிருந்து எடுத்தான்.
கோபமாக அவனைப் பார்த்தாள். ஆனால் அவன் உருவத்தை பார்த்தால் கேட்க பயமாக இருந்தது. கடைசியில் ஒரு பிஸ்கட் இருந்தது. அதை இரண்டாக உடைத்து பாதி எடுத்துக் கொண்டான்.
நாகரிகம் தெரியாத ஜென்மம். குண்டா, தடியா என்று மனதில் திட்டினாள். ரயில் வந்தது. ஏறி பர்த்தில் உட்கார்ந்தாள். வாட்டர் பாட்டிலை எடுத்தாள். அங்கே அவள் வாங்கிய மேரி கோல்ட் பத்திரமாக இருந்தது!
அப்படியென்றால் இவ்வளவு நேரம் சாப்பிட்டது அந்த குண்டனின் பிஸ்கட்டா?

லாக் ஆஃப்

“நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்” – ஸ்டாலின்

விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share