ADVERTISEMENT

ஆம்னி பேருந்து டிக்கெட்டும் ஆபிஸ் மேனேஜரும்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

அடுத்த வாரம் ஆயுத பூஜ சரஸ்வதி பூஜ லீவு வருது. சென்னைல வேல செய்ற நான் ஊருக்கு போலாம்னு பஸ் புக் பண்ண தேதிய பாத்தேன்.

அப்பதான் தெரிஞ்சுது அக்டோபர் 4,5 சரஸ்வதி பூஜனா, அதுக்கு முன்னாடி அக்டோபர் 1, 2 சனி ஞாயிறுனு

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆம்னி பஸ்ல 2000 ஆயிர ரூவா கொடுத்து டிக்கெட் போடுறோம், திங்கள் கிழமை ஒரு நாள் லீவு போட்டு 5 நாளா ஊருக்கு போய்ட்டு வந்துருவோம்னு திட்டம் போட்டேன்.

நேரா மேனேஜர்ட்ட போய், ‘ஒரு பெர்ஷனல் வொர்க் இருக்கு’ 3ஆம் தேதி திங்க கிழமை ஒரு நாள் லீவு வேணும்னு கேட்டேன்.

ADVERTISEMENT

அப்போ என்ன பார்த்த மேனேஜரு லாங் லீவு வேணும்னா கேளுங்க.. எதுக்கு பொய் சொல்றிங்க லீவுலாம் இல்லனு பொசுக்குனு சொல்லிட்டாரு…

ஒரு பக்கம் ஆம்னி பஸ் காரங்க டிக்கெட் விலைய ஏத்தி உசுற வாங்குறாங்கனா, இன்னோரு பக்கம் மேனேஜரு வேற…

ADVERTISEMENT

சரி மறுபடியும் போயி நான் லீவு கேக்குறேன்…
நீங்க அப்டேட்ட பாருங்க…

Memes Trolls Update Kumaru

சரவணன். ????
11 வருஷத்துல இரண்டு லட்சம் கேஸ் போட்டு இருக்கேன்..
சிலிண்டர் தானே?
போலீஸ்ங்க…

Memes Trolls Update Kumaru

நாகராஜா சோழன் MA, MLA
டாக்டர், எதுக்கு பேசண்டை அடிச்சீங்க ?
எங்க அண்ணனுக்கு காய்ச்சல் வந்து நோகாம 6 கிலோ எடை கம்மி பண்ணிட்டான்,
நானும் weight லாஸ் பண்ணனும் எனக்கும் காய்ச்சல் வர்ற மாதிரி ஒரு ஊசி போடுங்கன்னு சொல்றான் படவா ராஸ்கோலு.

Memes Trolls Update Kumaru

சரவணன். ????
அவ்ளோ பேர் முன்னிலையில் உங்க மனைவிக்கு அவங்க கட்சில இருக்குறவங்களே பாலியல் தொல்லை கொடுத்து ரெண்டு வாரமாச்சு.. இப்ப வந்து புகார் கொடுக்கறிங்களே?

~ வாட்ஸ்அப் பார்வர்ட் மெசேஜ் இப்ப தான் பார்த்தேன்!

Memes Trolls Update Kumaru

ச ப் பா ணி
ஊருக்குள்ள நல்லவங்களை பார்ப்பதும்,நல்ல ரோட்டை பார்ப்பதும் அரிதாகிவிட்டது
கோழியின் கிறுக்கல்
அம்மாவிற்கும், குழந்தைக்கும் இடையில் ஏற்படும் சண்டைகளை சுமூகமாக தீர்த்து வைக்கும் தந்தைகளுக்கே அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட வேண்டும்!!

ச ப் பா ணி
திங்கள் ஒரு மோசமான நாள்; வேலைக்கு மீண்டும் வருவதால்!

செவ்வாய் இன்னும் சிறந்த நாள்; திங்கள் கடந்து சென்றதால்!

புதன் நம்பிக்கை அளிக்கும் நாள்; வாரத்தில் பாதி கடந்ததால்!

வியாழன் ஒரு தூங்குமூஞ்சி நாள்; பெரிதாக எதுவும் நடக்காததால்!

வெள்ளியோ ஆரவாரமான நாள்; வாரஇறுதி வந்துவிட்டதால்!

Packiarajan Se
தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் சீரமைக்கப்படும்..

ஆட்சிக்கு வந்த பின் பொதுமக்களுக்கு பேருந்து கட்டண உயர்வு பாதிப்பில்லை..

சரவணன். ????
அதெப்படிப்பா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் இரண்டு லட்சம் கேஸ் போட்டு இருக்கேன்னு சொல்றே..
இருபதாயிரம் புக் படிச்சேன்னு சொன்னப்பவே தெரியலையா?

லாக் ஆஃப்

ஆளுநரே ஒரு கொலுதானே: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share