இன்னைக்கு நண்பர்கள் கூட டீக்கடைக்கு போயிருந்தோம்…
அங்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில பிரச்சாரத்தில பேசுனது டிவியில ஓடிட்டு இருந்தது.
அவர் பேசிக்கிட்டே இருக்கும் போது பின்னாடி இருந்த மாவட்ட செயலாளர் மயங்கி விழுந்துட்டாரு.
அத கூட கவனிக்காம தீவிரமா பேசிக்கிட்டே இருந்தாரு எடப்பாடி…
இத பாத்த நம்ம நண்பர், ஒருத்தரு மயங்கி விழுறத கூட கண்டுக்காம இப்படி பேசுறாரே அப்படின்னு வருத்தப்பட்டாரு
இதைக்கேட்ட இன்னொரு நண்பர், அவரு கண்டுக்கலன்னு நீங்க வருத்தப்படுறீங்க… ஆனா அவர காப்பாத்த ஆம்புலன்ஸ் வந்திருந்தா திமுக தான் அனுப்புச்சுன்னு சொல்லி தடுத்து தடுத்து நிறுத்தி இருப்பாங்க.. நல்ல வேளை அவருக்கு எதுவும் ஆகல அப்படின்னு சொல்றாரு
நீங்க அப்டேட் பாருங்க

ச ப் பா ணி
பெண்களிடமிருந்து ‘ம்’னு பதில் வந்தால் ‘உம்முனு’ இருக்காங்கனு அர்த்தம்

iQKUBAL
பேங்க் மேனேஜர் :~
இவனுக்கு நான் பாத்து zero balance account open பண்ணி குடுத்தேன் சாமி.. இவன் என்னடான்னா இன்னும் zero balance-லயே வச்சிருக்கான்..

ச ப் பா ணி
புத்தாண்டுக்கு சரக்கு விற்பனையை உயர்த்துவதே ஒவ்வொரு குடிமகன்களின்
புத்தாண்டு உறுதிமொழி

டிங் டாங்
அப்பார்ட்மெண்ட் என்பது குழந்தைகளுக்கான சிறை

படிக்காதவன்
எங்கடா போற
எண்ட் ஆஃப் இயர் வந்துடுச்சுடா
போய் “ஹேப்பி நியூ இயர்” கேசட்’லாம் தேடி தொடைச்சு வைக்கப்போறேன்…

Writer SJB
ஒரு வாரமா இடியாப்பம் சாப்பிடணும்னு ஆசைப்பட்ட என்னாலேயே அவன புடிக்க முடியல,, நீங்க எப்படி அவன பிடிச்சு லைசன்ஸ் வாங்க வைப்பீங்க??

கோழியின் கிறுக்கல்!
விதி என்று பலர் நினைத்திருப்பதை தூக்கி போட்டு மிதித்து முன் செல்பவரே,
இலக்கை விரைவில் அடைகிறார்!

அண்ணாச்சி
கிழவியான
நடிகை ராதிகா
அதென்ன “கிழவி ” யான…!!
-தாய் கிழவி

லாக் ஆஃப்
