ADVERTISEMENT

நீ அழுவாதே பாப்பா: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு இணையம் முழுக்க, விஜய்யின் பவள விழா பாப்பா விமர்சனத்துக்கு எதிரா வந்த கமெண்டுகள் பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு…

அப்படி பாத்துகிட்டு இருக்கும் போது, எங்க வீட்டு பாப்பா அழுதுகிட்டே ஓடி வந்துச்சு…

ADVERTISEMENT

என்னடானு கேட்டா…. தீபாவளி இந்த வருஷம் ஞாயிற்று கிழமை வருதாம்…

யார் யார்க்கோ என்னென்ன பிரச்சினை இருக்கு… உனக்கென்ன பிரச்சினை சொல்லி மண்டைல நாலு தட்டு தட்டி டியூஷனுக்கு அனுப்பிட்டு… மீண்டும் கமெண்டுகள பார்க்க ஆரம்பிச்சுட்டேன்…

ADVERTISEMENT

நீங்களும் பாருங்க…

ADVERTISEMENT

balebalu

நாலு பக்க அறிக்கைக்கு பதிலா

டிவி பேட்டியோ , பிரஸ் மீட்டோ வைத்து
நாலு வார்த்தையில் ‘பக்கா மாஸ் ‘
காட்டலாமே

mohanram.ko

பத்து நிமிஷத்துல போற ஊருக்கு, கூட்டமா இருக்கு அடுத்த பஸ்ல உட்கார்ந்துகிட்டு போகலாம்னு, பேருந்து நிலையத்துல 10 நிமிஷமா நின்னுகிட்டு இருக்கீங்களே… யார்றா நீங்கெல்லாம்…

Writer SJB✒️

கரூரில் இருந்து கதறி ஓடிய பாப்பா
நீ பாசாங்கு செய்யலாகாது பாப்பா
உனை பார்த்து இந்த நாடே சிரிக்குது பாப்பா..!

ச ப் பா ணி

இப்பெல்லாம் குடுக்கிற தெய்வம் கூரையை பிய்க்காமல்..
கால் பண்ணி
லோன் வேண்டுமானு கேட்குது

mohanram.ko

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்…
நைட் ஃபுல்லா மொபைல் பார்த்தா கண்ணு பூத்து தான்டா போகும்…

கடைநிலை ஊழியன்

நல்லவங்களுக்கு காலமே இல்ல பாஸ்..
அத ஏன்டா, என்கிட்ட சொல்ற..
நீங்க தான் நல்லாருக்கீங்களே..

iQKUBAL 

Wallet-னு சொன்னா பணக்காரன்..
Purse-னு சொன்ன மிடில் கிளாஸ்..
Purse-ah? ன்னு கேட்டா ஏழை..

Prince

ஓடி ஒளியாதே பாப்பா.!
நீ ஒப்பனையை கலைத்திடு பாப்பா.!
கூட்டத்தை கூட்டாதே பாப்பா.!
ஒன்றுமறியா குழந்தைகளை கொல்லாதே பாப்பா.!
சங்கித்தனம் செய்யாதே பாப்பா.!
சாக்கடையாய் நாறிடுவாய் பாப்பா.!
அரசியல் பழகு பாப்பா.!
அறிவற்ற தற்குறியாய் அலையாதே பாப்பா.!

Dr.Aravind Raja

வீட்டை விட்டு வெளியே வா பாப்பா
பனையூரில் பதுங்காதே பாப்பா
அரசியல் பழகு பாப்பா
தற்குறியாவே இருக்காதே பாப்பா.

egalitarian2897

வீட்டை விட்டு வெளியே வா பாப்பா
கரூர் மக்களை போய் பாரு பாப்பா
பனையூரிலே உட்காராதே பாப்பா
ஒப்பாரி வைக்காதே பாப்பா

BasheerVallam

னையூர் பங்களாவைவிட்டு வெளியில் வா பாப்பா ;
ஆதவ் பேச்சை கேட்காதே பாப்பா ;
டெல்லியை எதிர்க்க பழகிக்கொள் பாப்பா ;
ஆறு மணிக்கு பிறகு A/C ரூமில் அடையாதே பாப்பா

Sasikumar J

~ ஏன்டா சோகமா இருக்க…!
~ இல்ல அடுத்த வருஷம் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருது அதான்…!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share