நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு சாயந்திரம் நம்ம அண்ணன் கடையில, டீ குடிச்சிட்டே பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்…

’மும்பைல இருக்க அனில் அம்பானி நிறுவனத்துல அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியிருக்குனு போட்ருந்துச்சு’…இதை பக்கத்துல இருந்த நம்ம நண்பர்கிட்ட காட்டுனேன்.

ADVERTISEMENT

அவரு, ‘அது ஒன்னுமில்ல நண்பா, எதிர்க்கட்சிய குறிவச்சே ரெய்டு நடத்துறாங்கனு சொல்றாங்க.. உச்ச நீதிமன்றமும் அமலாக்கத் துறை அரசியலுக்காக பயன்படுத்தப்படுதுனு சொல்லிடுச்சு… அதான் நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட்னு அம்பானி நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் போய்ட்டாங்கனு’சொல்றாரு

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT


Sasikumar J

நமக்கே தெரியாது நம்மளோட அதிக சம்பளம் வாங்குறவன் நம்ம கூடவே தான் இருப்பான் ஆனால் வெளியே தெரியவே தெரியாது…!

ADVERTISEMENT

ச ப் பா ணி

எப்போதும் நம்மை குறைத்து மதிப்பிடாதது..
வெயிட் மெஷின் தான்


vijaychakkaravarthy

சந்தைல கஷ்டப்பாடாம இருக்குற எந்த உருளைக்கிழங்கும் அஞ்சு ரூபா பத்து ரூபாய்க்கு மேல மதிப்பு கூடாது…

கொஞ்சம் கஷ்டத்த அனுபவிச்சாதான் French fries ah மாறி நூறு இருநூறு ன்னு மதிப்ப உயர்த்திக்கும்…

iQKUBAL

Friend :~ மச்சான்.. என்னோட ஷார்ட் பிலிம்ல பிச்சைகாரன் மாதிரி நடிக்கிறியா?🙏

Me :~ மாதிரிலாம் இல்லடா.. ஆல்ரெடி அப்படித்தான் இருக்கேன்.. கையில 10 பைசா இல்ல..

ச ப் பா ணி

எதையும் மறக்க கூடாதுனு
நினைப்பதை, மறப்பது கூட
ஞாபக மறதிதான்

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

நம்மை பற்றி யார் என்ன பேசுறாங்க என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள நினைத்தால் வாழ்க்கையில் நாலு நண்பர்களை கூட பார்க்க முடியாது!..

Selva Bharathi

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய்விட்டுச் சிரிப்பது முகத்துக்கும் அழகு, அகத்துக்கும் அழகு.

செங்காந்தள்

“இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும்” – அதிபர் ட்ரம்ப்
உங்களுக்கு எங்கள் ஜீயோடுவது விளையாடுவதே வேலையாப் போச்சு.

கோழியின் கிறுக்கல்!!

“காலையில் எழுந்து வேலைக்கு போகவே பிடிக்கலை சிட்டு” என்றவுடன்,
“Same Pinchப்பா” என்கிறார் மகள்!!

சரவணன். 𝓜

2026 அதிமுக பாஜக அரசு அமைந்தால் பாஜகவின் கொள்கை திட்டமான மும்மொழி கொள்கை (இந்தி) அமல்படுத்தபடும் – மத்திய இணை அமைச்சர் முருகன். அதிமுக ~ நான் தான் இருக்கேன்ல…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share