இன்னைக்கு டீக்கடைக்கு போகும்போது அங்கே சூறாவளி, புயல்னு ஒரே சத்தம் கேட்டுட்டு இருந்துச்சி.
’என்னடா இப்போ தான் மியான்மர்ல நிலநடுக்கம் வந்து நெறய பேர் செத்துருக்காங்க… அதுக்குள்ள சென்னைல புயலா? இங்க டிசம்பர் மாசம் தானே வரும்’னு சத்தம் வந்த திசையில திரும்பி பாத்தேன்.
அங்கே டிவில, ”அணை போட்டு ஆற்றை தடுக்கலாம்; காற்றை தடுக்கமுடியாது; மீறி தடுக்க நினைத்தால், சாதாரண காற்று சூறாவளியாகவோ, சக்திமிக்க புயலாகவோ மாறும்”னு தவெக தலைவர் விஜய் ரொம்ப ஆவேசமா பேசிட்டு இருந்தாரு.
’ஒருவேள ஜனநாயகன் பட டயலாக்கா இருக்குமோ’னு மனசுக்குள்ள நெனைச்சிட்டு அங்க இருந்து கெளம்பிட்டேன்.
balebalu
தவெக முதல் பொதுக்குழு கூட்டம்
2,500 பேருக்கு மதிய விருந்து – செய்தி memes trolls update kumaru
மெனு எல்லாம் அனாவசியம்
உட்கார்ந்து சாப்பிட சேர் இருக்குமா இருக்காதா
அத சொல்லுங்க போதும்

ArulrajArun
ஆட்சியில் “முதல்வராவது” கடினம்
அரசியலில் “வருங்கால முதல்வர்” ஆவது ஈசி
ச ப் பா ணி
ஒரு காலத்தில் ஒரே குடும்பமாக இருந்தோம் என்பதற்கான அத்தாட்சியே குடும்ப வாட்ஸ் அப் குரூப்

குருநாதா
நல்லா இருக்கியானு கேட்டா..
நல்லா இருக்கேன்னு சொல்லு..
இல்ல ஏதோ இருக்கேன்னு சொல்லு
அது என்ன சூப்பரா இருக்கேன்னு வெறுப்பேத்துறது

Joe…
அரசியல்ன்னா என்ன?!
பண்ணையார் ~ மாசத்துக்கு ஒருக்க கூட்டம் போட்டு திமுகவை திட்டுறது..

ச ப் பா ணி
கைமேல் பலன் கிடைத்தது
மருதாணி வைத்தபோது!

கோழியின் கிறுக்கல்!!
மகளுக்கு அப்பா என்பவர், ஒரு பெரிய சைஸ் பொம்மை!!
Sasikumar J
கோவில்ல ரொம்ப நேரம் நின்னு வேண்டிக்கிட்டு இருக்குறவனக்கு நிறைய கஷ்டம், பிரச்சனை என்பது தான் நிதர்சனம்…!

லாக் ஆஃப் memes trolls update kumaru