இன்னைக்கு அதிமுக நண்பர் ஒருத்தர ஆபிஸ் வர்ற வழியில பார்த்தேன். memes trolls update kumaru
“என்னய்யா… உங்க பொதுச்செயலாளர் எடப்பாடி டெல்லி போயிருக்காரு. மறுபடியும் பாஜகவோட கூட்டணியான்னு” கேட்டேன்.
“எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றால் சில தியாகங்களை செய்யத்தான் வேண்டும் நண்பான்னு” ஒரு தினுசா உருட்டுனான்.
“தியாகம் பண்ணுங்க… ஆனா தயவு செஞ்சு மறுபடியும் தியானம் பண்ணி தர்மயுத்தம் நடத்தாதீங்கன்னு” சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
இவனே, இப்படி ரீல் விடுறான்னா இன்னும் அண்ணாமலை, ஜெயக்குமாரு விடுற ரீல் எல்லாம் கேட்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது: அண்ணாமலை
தனியார் – வார்த்தை விரயம்

ச ப் பா ணி
பெட்ரோல் விலை உயரலையேனு சந்தோசப்பட்டா..
டோல்கேட் கட்டணத்தை ஏத்திட்டாங்க

balebalu
‘ சொல்வதெல்லாம் உண்மை ‘ யின்
நவீன வடிவம் தான்
ட்விட்டரில் இப்போதைய
கணவன் மனைவி சண்டை

ச ப் பா ணி
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்..
அம்பது சேனல் வச்சாலும் அத்தனையிலும் விளம்பரம்தான் ஓடும்

தர்மஅடி தர்மலிங்கம்
100 % மனநிறைவு வாழ்க்கையில் கிடைக்காவிட்டாலும் ஃபோன் சார்ஜில் அவ்வப்போது கிடைக்கிறது!
குருநாதா
ஒன்னு தெரிஞ்சுக்கங்க
மோட்டிவேஷனல் வீடியோ பாத்து
முன்னேறலாம் முடியாது..
நாலுபேருக்கு வேனுமின்னா அட்வைஸ் பண்ணலாம் !

கோழியின் கிறுக்கல்!!
சிலரோ நாயை மனிதர் போல் நடத்துகிறார்கள்,
சிலரோ மனிதரை நாயைப் போல நடத்துகிறார்கள்!!
லாக் ஆஃப் memes trolls update kumaru