ஐயோ மாலா எரியுதுடி… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.memes trolls update kumaru

நண்பன், “மச்சி… என்னாமா வெயில் அடிக்குது. ஒரு நாளைக்கு மூணு டைம் குளிக்க வேண்டியிருக்குன்னு” உச் கொட்டுனான்.

“டேய்… ரொம்ப வெயில் அடிக்குதுன்னா ரெண்டு டைம் ஓகே… எப்புடிடா மூணு டைம் குளிக்குறன்னு” கேட்டேன்.

“காலையில ஒருமுறை, ஆபிஸ்‌ வரும்போது வெயில்ல ஒருமுறை, ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போய் ஒருமுறைன்னு” சொன்னான்.

“சரி… இந்த வெயிலால‌ எக்ஸ்ட்ரா ஒருதடவை குளிக்கிறன்னு சந்தோஷப்பட்டுக்கன்னு” அவன்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டேன்

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun

ஓட்டு போடுங்க உங்களுக்கு நல்லது செய்றோம் – பாஜக ( ரொம்ப வருஷமா Central லில் நாங்க தான்)

முதல்ல நல்லது செய்யுங்க நாங்க ஓட்டு போடுவோம் – தமிழ்நாடு

திருப்பூர் சாரதி

திமுகவில் யாரும் படித்துவிட்டு பதவிக்கு வரவில்லை – அண்ணாமலை
ஆனா பதவிக்கு வந்ததுக்கு அப்புறம், எல்லாரையும் படிக்க வைக்கிறாங்கல்ல?

Mannar & company

காதலிக்கும்போது நினைவுகள் எல்லாம் எதிர்காலத்தை நோக்கியே இருக்கிறது,

கல்யாணம் ஆனப்பிறகு நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தை நோக்கி சென்று விடுகின்றன..
என்ன டிசைன் இது!?

amudu

வியர்வை வர வாய்ப்பே இல்லாதவர்கள் தான், வியர்வையை மறைக்கும் வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ச ப் பா ணி

என்னை விட்டுப் பிரியமாட்டேன் என்கிறாய்
கண்டிப்பாய் இது தேர்தல் வாக்குறுதியாய் தான் இருக்கும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

வாழ்க்கை மட்டுமில்ல சரியா பழுக்காத முழு தர்பூசணியை வாங்கிட்டு போயி பழமும் சப்புன்னு தான் இருக்கும்..

குருநாதா

சின்ன புள்ளைல தியேட்டர்ல படம் பாக்கும் போதெல்லாம் அழுதுருவேன்

சென்டிமென்ட் சீனுக்கா

ஐஸ்கிரீம் கேட்டு

கோழியின் கிறுக்கல்!!

என்னப்பா Easyஆ வென்றிடுவீங்க போலவே!?

இதெல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லையே!!
-CSKvsMI

லாக் ஆஃப் memes trolls update kumaru

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share