டாஸ்மாக் முன்னாடி போலீஸா? : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு டாஸ்மாக் ஊழலுக்கு எதிரா முற்றுகை போராட்டத்தை தமிழக பாஜக அறிவிச்சிருந்தாங்க. ஆனா அவங்க போராட வர்ற வழியிலேயே எல்லோரையும் போலீஸ் கைது பண்ணி மண்டபத்துல அடைச்சிட்டாங்க. memes trolls update kumaru

ஈவ்னிங் அவங்கள ரிலீஸ் பண்ணதும், ‘அடுத்த ரெண்டு வாரத்துக்கு டாஸ்மாக் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போறோம்னு அண்ணாமலை தெரிவிச்சாரு.

இத டீக்கடைல என் கூட இருந்து கேட்டுட்டு இருந்த நண்பர், அப்போ எப்படியும் டாஸ்மாக்குல போலீஸ் பாதுகாப்பு போடும். அப்ப இனி நாம போலீஸ் பந்தபஸ்தோட குடிக்க போறோம்’னு சொல்லிட்டு சிரிக்குறாரு.

’யோவ்.. நீ லாம் சும்மா பைக்ல போனாலே, குடிச்சிருக்கனு போலீஸ் பைன் போடும், இப்போ டாஸ்மாக்லேயே நிப்பாங்க… அவங்களுக்கு ஜாலி தான்’னு சொன்னேன். ஆஃப் ஆயிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu

பிரதமருடன் நேர்காணலுக்கு 45 மணி நேரம் விரதம் இருந்தேன் –

பாட்காஸ்டர் ஃபிரிட்மேன்

நம்ம ஊர் மீடியாக்கள் : அடேங்கப்பா ஒரு நேர்காணலுக்கே அவ்வளவு விரதம் ன்னா அப்போ பிரஸ் மீட்டுக்கெல்லாம் நாம மொட்டை அடிச்சு, அலகு குத்தி , காவடி எடுக்கணும் போலயே

மயக்குநன்

மதுபான ஊழல் மூலம் திமுகவுக்கு ரூ.1,000 கோடி கருப்பு பணம் கைமாறியது!- அண்ணாமலை.

அப்ப… கருப்பு பணத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால எந்த பிரயோஜனமும் இல்லைன்னு சொல்லுங்க..!

ச ப் பா ணி

லவ் பெயிலியரான ஆண்கள் அத்தனை பேரும் எக்ஸ் சர்வீஸ்மேன்களே.!

உதயா சக்கரவர்த்தி

When we consumed 100% of mobile internet data.

Mobile network to Us:
“உனக்கு அவ்ளோ தான் லிமிட்டு”

amudu

பெண்கள் எங்கே சந்தித்துக் கொண்டாலும் சேலைகளைப் பற்றி பேசிக் கொள்வது போல் , வாக்கிங் செல்லும் ஆண்கள் எந்த கடையில் பலகாரம் சுவையாக இருக்கிறது என்பதை பற்றி பேசிக் கொள்கிறார்கள்.

தர்மஅடி தர்மலிங்கம்

“அவியல் கூட்டு போல வேளாண் பட்ஜெட்” – இபிஎஸ்

ஒருவேளை…. சாப்பிட வாங்க நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்திருப்பாரோ.?!

மயக்குநன்

தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும்!- டிடிவி தினகரன்.

அப்ப… மறுபடியும் சொத்துக்குவிப்பு வழக்கும் வருமா தலைவரே..?!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share