இனிக்கும் இந்தி மொழி… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு நம்ம திமுக நண்பர் ஒருத்தர டீக்கடையில பார்த்து பேசிக்கிட்டு இருந்தேன்.

அந்த சமயத்துல இரண்டு வடக்கு தோழிகள் டீ குடிக்க வந்திருந்தாங்க.

நம்ம நண்பரு அவங்க பக்கத்துல போய்… “வெல்கம் டு தமிழ்நாடுன்னு ஹேண்ட் ஷேக்” பண்ணிட்டு வந்தாரு.

நான் ஷாக்காகி, “என்ன நண்பா இப்போ தான் இந்திக்கு எதிரா ஹேஷ்டேக் போட்டீங்க… இப்படி ஹேண்ட் ஷேக் பண்ணிட்டு வந்து நிக்குறீங்களேன்னு” கேட்டேன்.

“நம்ம இந்திமொழிக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்போம்… இந்தி பேசுற பொண்ணுங்களுக்கு இல்லைன்னு” சொன்னாப்ல…

இதை நான் எதிர்பார்க்கவே இல்லை…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

படிக்காதவன்™

ஆன்மிக பரிகாரங்கள் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவது எப்படி? – செய்தி நம்ம வாயும் கையும் ஒழுங்கா இருந்தாலே போதும் கெட்ட நேரமும் நல்ல நேரம்தான்…

balebalu

சும்மா குத்தம் சொல்லாதீங்க நாங்களும் தமிழை வளர்க்கிறோம் எப்படி ” உடான் யாத்ரி கஃபே ” ன்னு பேர் வெச்சா

ச ப் பா ணி

Fan ல இருந்து சத்தம் மட்டும் தான் வருது. காத்து வரமாட்டீங்கிதே

வெயில்காலம் ஸ்டார்ட்

கோழியின் கிறுக்கல்!!

Rear view mirrorல பின்னால யாராவது வராங்களான்னு பார்க்கிறவங்களை விட, தலை கலைஞ்சிடுச்சான்னு பார்க்கிறவங்க தான் அதிகம்!!

குருநாதா

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி…

பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி..

கருப்பன் குசும்புக்காரன்

கார் , பைக் கேக்குறான்

ச ப் பா ணி

Shopping செய்யும் நேரத்தை விட, பில் போட ஆகும் நேரமே அதிகம் #ஷாப்பிங் மால் கொடுமைகள்

ArulrajArun

எழுத்தை அழிக்க நினைக்கும் இரப்பர் அந்த எழுத்தை அழிக்க முடிந்ததோ, முடியலையோ அதற்குள் தன்னையே அழித்துக் கொள்ளும் – கெடுவான் கேடு நினைப்பான்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share