போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு தமிழக வெற்றி கழக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு போய்ட்டு வந்த நண்பர் ஒருத்தர்கிட்ட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

“தலைவர் பேச்சுல, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லோரும் அரண்டு போயிட்டாங்கன்னு” சொன்னாப்ல.

“அது சரி… ஆளுங்கட்சியில இருக்குறவங்கள்ளாம் பண்ணையாரா இருக்காங்க, எங்க கட்சியில இருக்குறவங்க எல்லோரும் சாதரணமானவங்கன்னு உங்க தலைவர் சொல்லியிருக்காரேன்னு” கேட்டேன்.

“ஆமா… உண்மையைத்தானே சொல்லியிருக்காருன்னு” நண்பர் சொன்னாப்ல.

“அப்புறம் ஏன் நட்சத்திர விடுதியில நிகழ்ச்சி வைக்குறீங்க. அங்க ஒரு சாப்பாடே 2000 ரூபான்னு சொல்றாங்க. உண்மையான்னு” கேட்டேன்.

“கொஞ்சம் இருங்க நண்பா… அப்புறம் கால் பண்றேன்னு” சொல்லிட்டு போன வச்சாப்ல…

மறுபடி லைன்ல வரவே இல்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…mes trolls update kumaru

mohanram.ko

வாழ்க்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கலாம்…. ஆனா ட்ரெயின் அன்ரிசர்வடு பெட்டியில், கூட்டத்துல நீந்தி, அவசரமா ரெஸ்ட் ரூம் போற கஷ்டம் மட்டும் யாருக்கும் வரக்கூடாது

balebalu

புத்தம் புதுசா ரோடு போட்டிருக்காங்களே ன்னு உனக்கு சந்தோசம்

EB , டெலிபோன் காரங்க கையில கடப்பாரையோட உடனே வராம இருக்கணுமே ன்னு எனக்கு கவலை

குருநாதா

எதிரிக்கும் என்னோட நிலமை வரக்கூடாது

எந்த நிலமை?

வசதியா வாழ்றது

Sasikumar J

~ என்னடா மகாசிவராத்திரி நான்வெஜ் வாங்கி சாப்பிட்டு கிட்டு இருக்க…! ~ அடேய் நான் விஷ்ணு கோத்ரம் டா…!!

ச ப் பா ணி

“பணிவை கோழைத்தனம் என்றும்,துணிவை தலைக்கனம் என்றும்” பலர் தவறாய் எண்ணிக் கொள்கின்றனர்.

mohanram.ko

31 தொகுதிகளா குறைத்தாலும், ஓட்டு போட்டா தானே ஜெயிக்க முடியும்..

அய்யய்யோ, அதை மறந்துட்டேனே

joe…

யாருக்குயா Getout சொல்றே?! ~ யாருக்கு புரியணுமோ அவங்களுக்கு புரியும்.. அவங்களுக்கு புரியுறது சரி.. மக்கள் எங்களுக்கு புரிய வேண்டாமா?!

கோழியின் கிறுக்கல்!!

நாளைக்கு சிவராத்திரி என்றால், நாளை மறுநாள் தானே விடுமுறை தர வேண்டும்!? இத கேட்டா, நீ நாத்திகன் உனக்கென்னனு சொல்றாங்க!!

லாக் ஆஃப் memes trolls update kumaru


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share