இது என்னடா அண்ணனுக்கு வந்த சோதனை… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு ஆபிஸ் வர்ற வழியில நம்ம நாம் தமிழர் தம்பி ஒருத்தன பார்த்தேன்.

“என்னய்யா… உங்க அண்ணன் எதோ இலையுதிர் காலம், களையுதிர் காலம்னு விவசாயி மாதிரி பேசியிருக்காருன்னு” சொன்னேன்.

அதுக்கு அந்த தம்பி, “ஆமா… எங்க அண்ணன் சீமான், இயற்கையிலேயே ஒரு விவசாயி. கட்சியில யாரெல்லாம் சரிப்பட்டு வராமாட்டாங்களோ, அவங்களையெல்லாம் களையெடுத்துக்கிட்டு இருக்காரு. அதனால வர்ற எலெக்‌ஷன்ல விவசாயி சின்னம் கன்ஃபார்ம்னு” சொன்னான்.

அதுக்கு நான், “போற போக்க பார்த்தா… உங்க அண்ணன் தோட்டம் பாலைவனமாகிரும்போலன்னு” சொன்னேன்.

சைலண்டா கிளம்பிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
நமக்கு இருக்கும் சூடு, சொரணையைத் தான் பலர் ஈகோ எனச் சொல்லி விமர்சிக்கின்றனர்.memes trolls update kumaru

ArulrajArun
“ரசிகர்கள் வேறு… வாக்காளர்கள் வேறு என புரிந்துகொண்டேன்” – கமல்ஹாசன்
விஜய் to கமல் ; ஆண்டவரே நீயும் தனியா தேர்தல்ல நிக்க மாட்டேங்குற நிக்க போற என்னையும் இப்படி பயமுறுத்தி விடுற …

balebalu
எதுக்குடா சிரிக்குற
முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைச்சா என்ன குறைக்கலைன்னா என்ன
எப்படியும் என்ஜின் பெட்டிக்குள்ளேதான உட்கார்ந்துகிட்டு வரப்போறாங்க
அதை நினைச்சேன் சிரிச்சேன்

balebalu
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது”
-மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்
படித்தவுடன் சிரிக்கவும்

Joe
to பாஜக ~ TN மூலமா ஹிந்தி ஏன் தேவையில்லைன்னு மத்த மாநிலமும் யோசிப்பாங்க,
இல்ல நீ இந்த மேட்டர இப்படியே விட்டுட்டு ஓடுனாலும் சரி..
எப்படி பாத்தாலும் உனக்குத்தான் லாஸ்..

iQKUBAL
கல்யாணம் பண்ணனும்னு லவ் பண்ணு..
லவ் பண்ணிட்டோமேன்னு கல்யாணம் பண்ணாத..

Sasikumar J
ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு பிள்ளைகள் போல…
எல்லா பங்குகளிலும் பெட்ரோலும், டீசலும் அருகருகே…!

ச ப் பா ணி
மறைக்க முற்படும் போது தான் தொப்பையும், வழுக்கையும்
காட்டிக் கொடுக்கின்றன

mohanram.ko

மாநிலஅரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்’-செய்தி
பள்ளி கட்டும் இடத்தின் உரிமையாளரிடமும் அனுமதி பெற வேண்டாம்னு சொல்லி இருக்கலாம். ஐடியா இல்லாத பசங்க

லாக் ஆஃப் memes trolls update kumaru

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share