அப்போ.. நோட்டா தான் கெத்தா? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

memes trolls update kumaru

இன்னைக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரிசல்ட்… டீக்கடைல திமுக கட்சிக் காரங்களும், நாதக கட்சிக் காரங்களும் ரொம்ப உன்னிப்பா பாத்துட்டு இருந்தாங்க..

ஒருபக்கம் வழக்கம்போல நாதக இந்த தடவையும் டெபாசிட் வாங்கல… ஆனாலும் போன தேர்தல விட அதிகம்னு கெத்து காட்டுனாங்க…

இந்த பக்கம் திமுக காரங்க… இதுவரை நடந்த எலெக்சன்லயே இந்த தடவ நாங்க அள்ளுனது தான் அதிகம்.. கூடவே ஜெயிச்சிட்டோம்… அதனால நாங்க தான் கெத்துனு சவுண்ட் விட்டாங்க…

ரொம்ப நேரமா ரெண்டு பக்கமும் பாத்துட்டு இருந்த பெரியவரு.. “நீங்க யாருமே கெத்து இல்ல… இதுவரை நடந்த எலக்சன பாத்தாலும் சரி, போன தடவ நடந்த எலக்சன பாத்தாலும் சரி… இப்போ நோட்டா தான் பல மடங்கு அதிகமா ஓட்டு வாங்கிருக்குனு சொல்லிட்டு கெளம்பிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… memes trolls update kumaru

memes trolls update kumaru

balebalu
“உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட “
காங்கிரஸ் , ஆம் ஆத்மி நிலைமை
DelhiElectionResults

ஜோக்கர்
பகுத்தறிவு ன்னா என்ன??
புனித நீராட தண்ணிக்குள்ள போறப்போ கடவுள நம்பாம…கயித்த நம்பினான் பாரு… அதுதாண்டா பகுத்தறிவு.

ச ப் பா ணி
புதுப்படம் ஓடிடியில் எப்ப வரும்னு கேட்டால் லெஜெண்ட்,
ஒரிஜினல் பிரிண்ட் எப்ப வரும்னு கேட்டால்
அல்ட்ரா லெஜெண்ட்

ArulrajArun
மாப்பிள்ளைக்கு குறைவான CIBIL ஸ்கோர் – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
தட் மாப்பிள்ளை; சோறுக்கு வழி இல்லன்னு reject பண்ணா கூட பரவாயில்ல CIBIL ஸ்கோர் இல்லன்னு reject பண்ணா நான் என்னடா பண்றது


நெல்லை அண்ணாச்சி

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற ட்ரம்ப் முடிவு…
ஜோசியரே….அமெரிக்கா போகலாமா…!!!?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்..!
வாயில அடிங்க வாயில அடிங்க.. மோடியின் ராஜதந்திரப்படி, அடுத்த குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க 487 தேச பக்தர்கள் இறக்குமதின்னு சொல்லுங்க..

ArulrajArun
Private bus க்கு எப்போதும் “Private bus stop” நிறைய இருக்கும் போல
நினைச்ச இடத்துல எல்லாம் நிப்பாட்டி ஏத்திட்டு போறாங்க …

சப் பா ணி
எதிர்காலம் என்பது நம் விருப்பங்களால் மட்டுமே ஆனதல்ல. memes trolls update kumaru

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share