டையும் பிரச்சனை, டைட்டிலும் பிரச்சனை… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு காலைல ஒழுங்கா தலைக்கு டை அடிக்கலனு வீட்டம்மா திட்டுச்சு, சரியா டை கட்டலனு ஆபிஸ்ல மேனேஜர் திட்டுனாரு,. சரி இங்க தான் நமக்கு நிம்மதி இல்லனு வழக்கம்போல டீக்கடைக்கு போனேன்.

அங்க போனா, நம்ம அக்கவுண்ட்ல ஒரு ஸ்ட்ராங் டீ வாங்கி குடிச்ச நண்பன், ”மாப்ள விஷயம் தெரியுமா? இந்த விஜய் ஆண்டனியும், சிவகார்த்திகேயனும் ஒரே டைட்டில் வச்சி பிரச்சனை ஆயிடுச்சி” னு சொல்லி சிரிக்குறான்.

ADVERTISEMENT

அப்போ வந்த கோபத்துக்கு, கைல இருந்த டீய சிந்தாம மடக், மடக்குனு குடிச்சிட்டு பேசாம கெளம்பிட்டேன். வேற என்ன செய்ய… Soo sad…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

ADVERTISEMENT

balebalu memes trolls update kumaru

என்னது முதலில் AI கண்டு பிடிச்சது
எம்ஜியாரா
எப்படிடா சொல்லுற
ஆமாண்ணே அவருதான AI ADMK ன்னு ஆரம்பிச்சாரு

Writer SJB

உங்க வீட்டுக்காரர் ரொம்ப முடியாம படுத்து இருந்தாரே இப்ப எப்படி இருக்காரு?
இப்ப கொஞ்சம் பரவாயில்ல காபி மட்டும் போட்டு தர்றார் இன்னும் சமையல் பண்ண ஆரம்பிக்கலமா..!

ADVERTISEMENT

ச ப் பா ணி

பஜ்ஜி போண்டா எனபது நம் டயட்டை உடைக்க வந்த ஆயுதங்கள்

பாக்டீரியா

பிப்ரவரி மாசம் வேற வர போகுது..
டெய்லி ஏதாவது ஒரு நாளை கொண்டாடி மத்தவங்க எல்லாம் வாழவே தகுதி இல்லாத மாதிரி மன உளைச்சலை உண்டாக்குவாங்களே

கோழியின் கிறுக்கல்!! memes trolls update kumaru

தெரு மளிகைக்கடைகாரர்,
நாளடைவில் குடும்பத்தில் ஒருவராக மாறி விடுகிறார்!

ச ப் பா ணி

பேச்சிலர்களை பொறுத்தவரை குப்பையை மறைப்பதுதான்
Waste management

கோழியின் கிறுக்கல்!!

நாம் பயன்படுத்தாமல் விட்டாலும் Mobileன் charge drain ஆகிட்டே தான் இருக்கும்,
அது போலவே நம் வாழ்வின் நாட்களும்!!

லாக் ஆஃப் memes trolls update kumaru

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share