அடடா இன்னைக்கு தான் ரிலீஸ் ஆச்சு அதுக்குள்ள நெட்ல படம் லீக் ஆயிடுச்சாமே… அப்படின்னு நம்ம விஜய் ரசிகர் தம்பி ஒருத்தரு ரொம்ப கவலையா கேட்டாரு.
அதுக்கு நான் அவர்கிட்ட ஏம்பா பர்ஸ்ட் லுக் இத்தனை மில்லியன் மோஷன் போஸ்டர் அத்தனை மில்லியன் ரீச் ஆகி சாதனை செஞ்சிருக்குன்னு சொல்லிக்கிட்டீங்களே அதெல்லாம் நெட்ல தானே… அதெல்லாம் நெட்ல போனா சாதனை… படம் நெட்ல போனா வேதனையா? என்னப்பா உங்க நியாயம் அப்படின்னு கேட்டேன். லியோ விஜய் மாதிரியே மொறச்சிப் பாத்துட்டு போயிட்டாப்புல.
நீங்க அப்டேட் பாருங்க…

Kirachand
லியோ படம் சூப்பர்ண்ணே!
நீதான் படமே பாக்கலியேடா!
அதான் சூப்பர் ஸ்டாரே சொல்லிட்டாரேண்ணே!
நெல்லை அண்ணாச்சி
வரிப்பணத்தில் கட்டப்படும் இடங்களுக்கு தலைவர்கள் பெயர் வைப்பதை ஏற்க முடியாது….
அண்ணாமலை ஆவேசம்
for example … நரேந்திரமோடி கிரிக்கெட் ஸ்டேடியம்

ச ப் பா ணி
சலூன் கடையில் வைத்திருக்கிற நடிகர்கள் முகம்., அழகா இருக்க காரணமே அவர்கள் முடி வெட்டாம இருப்பதால்தான்
balebalu
பக்கத்து மாநிலத்திலிருந்து
‘தண்ணீர்’ வருதோ இல்லையோ
‘சினிமா Review’ சீக்கிரம் வந்து விடுகிறது

ச ப் பா ணி
உனக்கு எந்த ட்ரஸ் போட்டாலும் நல்லாருக்கும் என்பது
நவீன வஞ்சப் புகழ்ச்சி அணி.
சரவணன். ????
20 ஆண்டுகளாக நடிகர்களுக்கு இடையூறு – அண்ணாமலை
ஜி ~ பத்து வருஷமா நானே நல்லா தான்டா நடிச்சிக்கிட்டு இருக்கேன்..

ஜோ.
என்னா மனுஷன்யா குண்டு போட்ட இஸ்ரேல்க்கும் சப்போர்ட் பண்றாரு,
அதனால பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்துக்கும் வருத்தப்படுறாரு..
என்னா மனுஷன்யா நம்ம ஜீ..

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
லாக் ஆஃப்
பாலஸ்தீன- இஸ்ரேல் விவகாரம்: மோடி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்!
காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா -பந்துவீசிய விராட் கோலி
