லியோ… லியோ… அய்யோ: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

 

டிவிய தொறந்தா போதும்… நியூசில இருந்து விவாதம் வரைக்கும் லியோ, லியோ தான்.

ADVERTISEMENT

ஒரு படத்தை காலையில நாலு மணிக்கு போடுறதா? ஏழு மணிக்கு போடுறதா? ஒன்பது மணிக்கு போடறதா? அப்படின்னு விவாதிக்கிறாங்க. நாட்டுக்கு ரொம்ப முக்கியமான பிரச்சினை… படம் பாக்குறோமோ இல்லையோ இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு டிவி பார்க்க கூடாதுடா சாமி…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

Kirachand
பாஜக எனும் சைத்தானின் கூட்டணியில் இருந்து விலகியதில் மகிழ்ச்சி!- திண்டுக்கல் சீனிவாசன்
பின்னாடியே அமலாக்கத்துறை, சைத்தான் ரூபத்துல வந்தால் சந்தோசமா?

ADVERTISEMENT

கோழியின் கிறுக்கல்!!
கருத்து சொல்வதை விட கம்முன்னு இருப்பதற்கே,
அதிக அறிவு தேவைப்படுகிறது!!

சரவணன். ????
பாஜக எனும் சைத்தானின் கூட்டணியிலிருந்து விலகியதில் மகிழ்ச்சி! – திண்டுக்கல் சீனிவாசன்
அமலாக்கத்துறை & ஐடி ~ ஆஹான்..!

balebalu
பழைய டிரெண்ட் : படம் ரிலீஸ் பண்ணி பேர் வாங்கும் தியேட்டர்
புது டிரெண்ட் : படம் ரிலீஸ் செய்யப்படாது ன்னு சொல்லி பேர் வாங்கும் தியேட்டர்

ℳsd ❝இதயவன்❞
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற கட்சியின் நிலைப்பாட்டை பொதுச் செயலாளர் பழனிசாமி தெளிவாக அறிவித்துவிட்டார் ~ எஸ்.பி.வேலுமணி
இதுக்கு முன்னாடி அந்த தெளிவுகளில் பல நெளிவுகள் இருந்திருக்கே?!

கடைநிலை ஊழியன்
மச்சான் 4 மணி ஷோ கன்ஃபார்ம் ஆகிருச்சு..
சூப்பர் டா.. வா புக் பண்ணுவோம்..
ஷோ இல்ல னு கன்ஃபார்ம் ஆகிருச்சு..

லிட்டில் கிருஷ்ணா
கோவமா இருக்க பொண்ண கூல் பண்றதும் ஸ்கேல் இல்லாம கோடு போடறதும் ஒன்னு….
நீங்க ஒரு பக்கம் போனா அது ஒரு பக்கம் போயிரும்

சரவணன். ????
பாஜக எனும் சைத்தானின் கூட்டணியிலிருந்து விலகியதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 1000 மடங்கு மகிழ்ச்சி! – திண்டுக்கல் சீனிவாசன்.
எடப்பாடி பழனிசாமி ~ இவன் வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றான்டா…

கோழியின் கிறுக்கல்!!
கஷ்டத்தின் போது கூட இருப்பவன் நண்பன்!
கஷ்டத்துக்கு காரணமாய் இருப்பவனே உயிர் நண்பன்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

செந்தில் பாலாஜி வெளியே வருவாரா? நாளை தீர்ப்பு!

கமெண்ட் பண்ண காசா?: X தளம் அறிவிப்பு!

கார்த்தியின் “ஜப்பான்” டீசர் வெளியானது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share