பிஜேபி கூட்டணிக் குழு: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

டீ கடை டிவியில பிரேக்கிங் நியூஸ் மியூசிக்கோட ஓடிக்கிட்டே இருந்துச்சு. டிவிய பாத்துக்கிட்டே நம்ம நண்பர், ‘என்னய்யா எல்லா கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை குழுலாம் போட்டிருக்காங்க. இந்த பிஜேபியில அப்படி ஒண்ணும் அறிவிச்ச மாதிரி தெரியலையே…’ அப்படினு கேட்டாரு.

உடனே பக்கத்துல டீ குடிச்சுக்கிட்டிருந்தவர் டென்ஷனாகி, , ‘அட ஏங்க நீங்க வேற… எல்லா கட்சிகளும் கமிட்டி போடுறதுக்கு முன்னாலயே பிஜேபி அதெல்லாம் போட்டு செமையா பேச்சு வார்த்தை நடத்தி முடிச்சுடுச்சு. மம்தாவோட மருமகன் அபிஷேக் மேல கேஸை காட்டி பேச்சு நடத்தி மேற்கு வங்காளத்துல தனிச்சு போட்டியிட வைச்சிட்டாங்க. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மறுபடியும் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியிருக்காங்க. பிஜேபியோட கூட்டணி உருவாக்கும் குழு, கூட்டணி உடைக்கும் குழுவுக்கு ED தான் தலைவரு… சிபிஐ, இன்கம்டாக்ஸும் உறுப்பினர்கள்… இவ்ளோ பிரேக்கிங் நியூஸ் பாத்தும் புரியலையா உங்களுக்கு?’னு கேட்டாப்ல.

டீயை விட இந்த மேட்டர்தான் சூடா இருந்துச்சு.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
அமித்ஷாவின் பேச்சை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை! – ஓபிஎஸ்
பழனிசாமி ‘ஜி’யையே எதிர்க்க துணிஞ்சிட்டாரு…போவியா…

ℳsd இதயவன்
அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது – டிடிவி தினகரன்
உங்களை யாரு இப்ப எங்க கூட சேர்ந்து பணி ஆத்த சொன்னாங்க ~ எடப்பாடி ?!

ச ப் பா ணி
25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு
#ஏட்டுக்கணக்கு எலக்சனுக்கு ஆகாது

mohanram.ko
காபி ரைட்ஸ்’ம் வாங்கி வைத்திருக்கிறார், டீக்கடைக்காரர்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஜெர்மனியில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை, 3 நாட்கள் விடுமுறை!
#இதெல்லாம் இன்போசிஸ் நாராயணமூர்த்தி பார்த்தா என்ன நினைப்பாரு..?

மயக்குநன்
தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்!- அண்ணாமலை.
மத்தியிலா..?!

குருநாதா
காதலர் தினத்தில் நடிச்ச குணால் செத்துட்டாரு தெரியுமா
ஆமா தெரியும் எதுக்கு இத இப்ப சொல்றீங்க
காதலர் தினத்தில் நடிக்காதீங்க…

தமிழ்
Me to Me ~உனக்கு வர்ற பிரச்சனைய love பண்ணு,
அப்போதான் அதுவும் உன்ன பிடிக்காம,உன்ன விட்டு போயிடும்

ℳsd இதயவன்
40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு உள்ளது ~ இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன்
ஆசை படலாம் பேராசை படகூடாது அதுக்கு போட்டியிட 40 வேட்பாளர் வேணுமே ?!

கடைநிலை ஊழியன்
நம்ம நினைக்குறது என்னமோ, ஆகா ஓகோ தான்..
ஆனா, கிடைக்குறது என்னமோ.. அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் தான்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

டிஜிட்டல் திண்ணை: வேலுமணியின் மெகா டீல்… தனிமைப்படுத்தப்படும் அண்ணாமலை?

சண்டிகர் மேயர் தேர்தல்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share