மீசையை காணோம்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

“அண்ணே..நம்ம ஏன்ணே ஜெர்மனி மாதிரி, இங்கிலாந்து மாதிரி, ஜப்பான் மாதிரி தற்சார்பு நாடா ஆகல?”

“அடேய்..ஒரு காலத்துல நம்மளும் அப்புடித்தாண்டா இருந்தோம். காலப்போக்குல உழைக்கிறது எப்புடின்னு மறந்து அடிமையாய்ப் போய்ட்டோம். அதான் இப்ப கஷ்டப்படுறோம்.”

ADVERTISEMENT

“ஆமாண்ணே..நம்ம புஷ்பக விமானம் ஓட்டி இருக்கோம், 1000 வருஷத்துக்கு முன்னாடி சைக்கிள் எல்லாம் கோயில்ல சிற்பம் வடிச்சு வெச்சிருக்கோம்.”

“ஃபோன்ல வாட்ஸப் வெச்சிருக்கியா? ஸ்கூல், காலேஜு குரூப்புல எல்லாம் இருக்கியா?”

ADVERTISEMENT

“அட ஆமாண்ணே ஆமா. 99 குரூப்புல இருக்கேண்ணே. டெய்லி குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் எல்லாம் கரெக்டா எல்லா குரூப்புக்கும் அனுப்பிருவேன். மாறி மாறி படம் போட்ட மெசேஜ் வந்தா ஃபார்வர்டு பண்ணிருவேன். எப்புடி கரெக்டா கண்டுபுடிச்சீங்க?”

“நெனைச்சேன். நீ வாட்சப்பையே பார்த்துட்டு வீட்டுல அப்புடியே படுத்திரு ராஜா, தற்சார்பு நாடா நம்ம மாறிடலாம் என்ன? வரேன்”, என்றபடி சட்டென கிளம்பிய குமாரை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தான் நண்பன்.

ADVERTISEMENT

**ஆட்லின்**

இந்த உலகத்தில் அன்பு காட்ட தான் ஆள் இல்லை… ஆனா குத்தி காட்ட கூட்டமே உள்ளது…!

**ஸ்ரீபுத்தா**

பீலா ராஜேஷ் இருக்குறவரைக்கும் கொரனா கட்டுக்குள் இருந்துச்சுனு டீக்கடையில இரண்டு பேரு பேசிக்கிறானுக…. அடேய்களா…

**ஜோக்கர்**

காவி ~ என்ன சொல்லி ஓட்டு கேட்டே? ~ இந்துக்களே ஓட்டு போடுங்கன்னு. காவி ~ இப்ப நா சொல்ற மாதிரி சொல்லு. ஐபிஎஸ்ஸ ராஜினாமா பண்ணிட்டு மக்கள் பணியாற்ற வந்திருக்கன்னு சொல்லு. நா உங்களில் ஒருத்தன்னு சொல்லி இறங்கு.. ஓட்டு விழும்.

**தர்ம அடி தர்மலிங்கம்**

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை விந்தியா நியமனம்!? நம்ம கட்சியில கொள்கையெல்லாம் வேற இருக்கா!

**உமாமகேஸ்வரன் பி செல்வம்**

எனக்கு ஏன் Demonetization பிடிக்கும்? எனக்கு ஏன் GST முறைகேடு பிடிக்கும்? எனக்கு ஏன் CAA பிடிக்கும் ? எனக்கு ஏன் இந்துத்துவா பிடிக்கும்? எனக்கு ஏன் சைனா சரண்டர் பிடிக்கும்? எனக்கு ஏன் பொருளாதார சீர்குலைப்பு பிடிக்கும் ? இப்படி நேரடியாக சொல்லமுடியாதவர்கள் சொல்லும் டெம்ப்லேட் எது?

**சிவக்குமார் டிடி**

உண்மையை ஏற்கனவே

அறிந்திருப்பதால்

பொய்களை கேட்கவே

விரும்புகிறேன்!

**வனயட்சி**

பயங்கர சாமர்த்தியமா இருக்கறவங்கள பார்த்தா மொதல்ல மனசு அசந்து போனாலும், “போடா இதெல்லாம் தெரிஞ்சுக்காமயே இவ்ளோ தூரம் வந்தாச்சு”ன்னு பிறகு தோணத்தான் செய்யுது ஒவ்வொரு முறையும்..

**ஆர்வக்கோளாறு**

பெரிய பெரிய முறுக்கு மீசைலாம் கொரோனாவால் “மாஸ்க்”குக்கு பின்னாடி அடங்கி கிடக்குது …!!

**லாக் ஆஃப்**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share