அதிமுக நண்பர்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். ’என்னண்ணே… கூட்டணிக்காக கதவும் தெறந்திருக்கு… ஜன்னலும் தெறந்திருக்குனு அண்ணாமலை சொல்லியிருக்காரே… அது உங்களுக்காகத்தானே’னு கேட்டேன்.
டீய குடிச்சுட்டு கிளாசை கீழ வைச்சிட்டு நிதானமா அவர் சொன்னாரு, ‘அண்ணே… ஆறு மாசத்துக்கு முன்னாடி அண்ணாமலை அதிமுகவைப் பத்தி வாயத் தொறக்காம இருந்திருந்தார்னா இப்ப கதவையும் தொறந்துக்கிட்டு ஜன்னலையும் தொறந்து வெயிட் பண்ணிக்கிட்டிருக்க வேணாம்… அவர் வாய மூடிக்கிட்டிருந்தா போதும்’னு சொன்னாரு.
நானும் வாயத் தொறக்காம வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
மயக்குநன்
பத்து வருஷமா வராத நேரம், தேர்தல் பக்கத்தில் வந்ததும் வந்துடுச்சோ..?!
சித்ரா தேவி
மொபைல் ஒலிக்கையில் யார் என்று பார்க்காமலும், எந்தத் தயக்கமும் இல்லாமலும், இயல்பாக எடுத்துப் பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
Sasikumar J
ஒரு உண்மையை மறைக்க 10 பொய் சொல்ல வேண்டி இருக்கும், 10 பொய் சொல்றதுக்கு பதிலா ஒரு உண்மைய சொல்லிடலாம் எது சுலபம்னு நம்ம தான் முடிவு பண்ணிக்கணும்…!
balebalu
சண்டிகர் தேர்தல்ல அதிகாரி வசமா மாட்டிகிட்டாரே
இனிமே வரப்போற தேர்தலை ஒழுங்கா நடத்துவாங்க இல்ல
அதான் இல்ல… இனிமே CCTV வீடியோ சிக்காதமாதிரி உஷாரா நடத்துவாங்க
ச ப் பா ணி
முதல் குப்பை எங்கு விழுகிறதோ, அதுவே குப்பைத் தொட்டியாகிறது.
தர்மஅடி தர்மலிங்கம்
அதிமுக பிரச்னையில ‘குளிர்காய’ விரும்பலை: அண்ணாமலை!
‘வெயில்’ காலம் வந்திடுச்சு போல..?!
மயக்குநன்
மோடி மீண்டும் பிரதமராக ஓபிஎஸ் விரும்புகிறார்!- அண்ணாமலை.
கூடவே ஓ.பி.ரவீந்திரநாத் மீண்டும் எம்பியாகவும் விரும்புறாரு..!
கோழியின் கிறுக்கல்!!
ஒருவருக்கு பிடிக்காமல் போகும் அளவிற்கு,
அன்பு செலுத்துவது ஆபத்து!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL: ஆரம்பம் முதல் இன்று வரை… தோனி வாங்கிய சம்பளம் எவ்வளவு?
உள்ளூர் தொழில்முனைவோருக்கான புதிய செயலி… தொடங்கி வைத்த பிடிஆர்