இன்ஸ்டாவும் இல்லாத இம்சையும்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

“என்ன கலை..மொபைல பார்த்து கடுப்பாகிட்டே இருக்குற? என்ன எதுனா இணைய சண்டையா?” என்று தங்கையைக் கேட்டான் குமார்.

“அத ஏன் கேக்குற? இன்ஸ்டாவுல நல்லா அழகழகா ஃபேஷன் டிப்ஸ், குக்கிங் டிப்ஸ், மேக்கப் டுட்டோரியல் அப்டின்னு ஒரு மாதிரி ஜாலியா இருந்துச்சுண்ணா. டெய்லி அந்தப் பக்கம் போனா ஒரு என்டர்டெயின்மென்டா இருக்கும். ஆனா இப்ப அந்தப் பக்கம் போகவே புடிக்கல”, என்றாள் கலை.

ADVERTISEMENT

“ஏன்மா? என்ன பிரச்? யார்னா ரேக்கிங் பண்றாங்களா? வேற எதும் பசங்க பிரச்னையா?”, குமாருக்குள் தூங்கிக்கொண்டிருந்த அண்ணன் காரக்டர் விழித்துக் கொண்டது.

“அட அதெல்லாம் இல்லைண்ணா..டிக் டாக்ல ஆக்டிங் குடுத்துட்டு இருந்ததுங்க எல்லாம் இன்ஸ்டால வந்து குழப்பி, மீன் மார்க்கெட் மாதிரி, நல்லாவே இல்ல தெரியுமா?”, என்றாள்.

ADVERTISEMENT

“இது ரொம்ப தப்பு கலை! அவங்க அவங்களுக்கு கிடைக்குற இடத்துல அவங்க திறமையைக் காட்டட்டுமே? அதென்ன டிக் டாக் பண்றவங்க கீழ, இன்ஸ்டாவுல மேக்கப் டுட்டோரியல் நடத்துறவங்க மேல? எல்லாரும் ஒண்ணு தான்; சோஷியல் மீடியா எல்லாருக்கான இடமும் தான். யார் என்ன சொல்லணும் அப்டிங்கறது மேட்டரே இல்ல. என்ன சொல்லப்படுது, அதுனால நமக்கு என்ன நல்லது இருக்கு? சிரிக்க முடியுதா, ஹேப்பியா இருக்க முடியுதா பாரு. இல்லாட்டி பிளாக் பண்ணிட்டு போ. இப்பிடித்தான் பத்மப்பிரியா அப்டிங்கற டிக் டாக் பிரபலம் ஈ.ஐ.ஏ. பத்தி பேசி வீடியோ போட்டுச்சு. அதை டிக்டாக் ஸ்டார்னு கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க. எதுக்கு இது? இது மக்களாட்சி மா, யார் எங்க என்ன வேணாலும் அடுத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இல்லாம பண்ணலாம், சரியா?”

“ஹ்ம்ம்”, என்ற தங்கையின் முனகல் கேட்டு சலித்தபடி நகர்ந்தான் குமார்.

ADVERTISEMENT

**சிவா கே எஸ்**

கொஞ்சம் பின்னாடி போய் யோசிச்சு பார்த்தீங்கன்னா நமக்கு இன்னைக்கு எப்படி மாரிதாஸ், மதன், அண்ணாமலை என்று புதுப்புது முகங்களா தேர்தலுக்கு முன்னாடி வர்ராய்ங்களோ, அதே போலதான் 2014ல அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடின்னு ஒரு கும்பல் நம்பள செம்மத்தியா ஏமாத்திருக்குது

**கோழியின் கிறுக்கல்**

நிம்மதியும் மகிழ்ச்சியும் பணம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது என்பதை உணரத் தொடங்கும் நொடியில் இருந்து தான் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம்!!

**அன்பே செல்வா**

62 ஏக்கர் நிலம் வெச்சிருக்கற அண்ணாமலைகள் IPS வேலய விட்டு விவசாயம் பாக்கறது பேஷனா கூட இருக்கலாம் ஆனா, நிலமில்லாத ஏழைகள் படிச்சி அரசு அதிகாரத்துக்கு போறதுதான் முன்னேற்றத்தை தரும் ஒயிட் வாட்சப் விவசாய போராளிகளை ஒதுக்கிட்டு அதிகாரத்துக்கு போறதுக்காக படிங்க ஒயிட்..

**சூர்யா சேவியர்**

ஆடு மேய்த்தவர்களை IAS, IPS,IFS,IRS ஆக்கியதே சமூகநீதி. IPS களை மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியதே மனுநீதி. போங்கய்யா போயி புள்ளகுட்டிகளை படிக்க வைங்க.

**செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்**

படுத்திருக்கும் போதே மரணம் வந்தால் பரவாயில்லை. மரணம் வரும் வரை படுத்துக்கொண்டு இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை

-படித்ததில் வலித்தது

**முகமூடி**

விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை..!! சிரிப்பின் பின்னால் சிதறி கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை..!!

**லாக் ஆஃப்**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share