ஆவணி ஆஃபர் இல்ல… தேர்தல் ஆஃபர்… : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

memes and trolls update kumaru

இன்னைக்கு நம்ம பக்கத்து வீட்டு சித்ரா… மதியானத்துல இருந்து ஒரே குஷியா இருந்தா.. என்னான்னு கேட்டதுக்கு ”உனக்கு தெரியாதாக்கா… அதான் சிலிண்டர் விலை 200 குறைச்சிட்டாங்களே”ன்னு சொல்லி குத்தாட்டம் போடாத குறையா குதிச்சா… அத கூட மன்னிச்சிட்டேன்.

அதோட “ஆடி முடிஞ்சி… ஆவணி வந்த பிறகும் கூட சிலிண்டர் விலைல ஆஃபர் கொடுக்குறாருனா நம்ம ஜி எவ்ளோ நல்லவரு பாத்தியாக்கா”ன்னு கேட்டா பாருங்க…

ADVERTISEMENT

இது ஆவணி ஆஃபர் இல்ல, தேர்தல் ஆஃபர்னு சொன்னதும் … ஆடிட்டு இருந்த சித்ரா… அரண்டு போய் அமைதியா டீ போட போயிட்டா…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க ப்ரெண்ட்ஸ்!

ADVERTISEMENT

பாக்டீரியா

சின்ன பசங்க மாதிரி தமிழ் பெண்கள் அழகு, கேரளா பெண்கள் அழகுனு சண்ட போட்டுட்டு இருக்கானுவ…
பெண்கள் ன்னாலே அழகு தான்யா..

ADVERTISEMENT


balebalu

2023க்குள் 14 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் ~ பிரதமர் மோடி
இன்னும் இருக்குறதே நாலு மாதம் தான்
அதுக்குள்ள 14 கோடி ???


கோழியின் கிறுக்கல்!!

பிக்பாக்கெட் அடிக்கிறவன் பணத்தை எடுத்துகிட்டு, கார்டை திரும்ப தருவது போன்று தான்,
கேஸ் விலையை ஏற்றி இறக்குவதும்!!


வசந்த்

வங்கியில் பணம் டெபாசிட் செய்கின்றவர்களை விட நந்தியின் காதில் ரகசியங்களை டெபாசிட் செய்கின்றவர்களே அதிகம்.

லிட்டில் கிருஷ்ணா

She – எனக்காக எவ்ளோநாள் ஆனாலும் வெயிட் பண்ணுவியாடா.. ????‍♂️
அஜித் Fan- ங்க நானு

வேற வழி இல்ல !

சேட்டு பொண்ணு சோனம்..
இன்னிக்கு பாரு ஒணம்..
சாப்புட ஓட்டல் போணம்…
தின்னுட்டு பாத்தா பர்ச காணம்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

அகில இந்திய இந்து மகாசபை தலைவர்:

அன்பே நிலா, உன்னை இந்து ராஷ்டிராவாக அறிவிக்கறேன்..
சர்வதேச வானியல் கழகத்துக்கு தெரிஞ்சா செருப்பால அடிப்பான்..

கடைநிலை ஊழியன்

wall clock marriage gift –
wall clock கிஃப்ட் குடுத்தது கூட பரவாயில்ல.. ஆனா 10 வருசத்துக்கு முன்னாடி அவன் கல்யாணத்துக்கு வந்த wall clock ‘க்க warranty card கூட எடுக்காம குடுத்தான் பாரு..
மறக்க மாட்டேன்..

PG

ஒரு Nano கார் ஹைவே’ல பழுதாகி நின்னிருச்சு.
அதுக்கு உதவி செய்ய ஒரு Audi கார் ஓனர் முன்வராரு.
“நான் உங்க Nano காரை அடுத்த ஊர்வரைக்கும் கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப் போறேன் .
எப்பவாவது வேகம் அதிகமாயிருச்சுனு தோனுனா நீங்க உங்க ஹெட்லைட்ட டிம்/பிரைட் பண்ணுங்க’ன்னாரு
டோப்பிங் ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர் போயிருக்கும் போது,
அந்த Audi கார ஒரு BMW கார் செம வேகத்துல ஓவர்டேக் செய்யுது…!
Audi கார்க்காரர் காண்டாயிடுராரு…
“Audi கார, BMW கார் ஓவர்டேக் பண்ணுறதா ? நெவர்…”
ரெண்டு பெரிய காருக்கும் பலத்த போட்டி…
150 கிலோமீட்டர் ஸ்பீடு…
Nano க்காரர் லைட்ட போட்டுப்போட்டு அணைக்கிறாரு, பயந்துகிட்டு…
ஆனா Audi காரர் கண்டுக்கவே இல்ல. வேகமும் குறைக்கல.
இதப் பாத்த ஒரு போலீஸ்க்காரர் தன்னோட வாக்கிடாக்கிய எடுத்து அடுத்த செக் போஸ்ட்ல கூப்பிட்டு சொல்றாரு…
“ஒரு Audi காரும், BMW காரும் போட்டி போடுறாங்க 150 கிலோமீட்டர் ஸ்பீடு…!
அதுல முக்கியமான விஷயம் என்னன்னா? ஒரு Nano கார் அவங்கள ஓவர்டேக் பண்ண லைட்ட அடிச்சுக்கிட்டே பின்னாடியே விரட்டிக்கிட்டு போகுது…! ????

memes and trolls update kumaru
நீதி: எவனுக்கு என்ன பிரச்சினைன்னு இங்கே எவனுக்கும் தெரியாது. எதையோ பாக்குறது, கேக்குறத வச்சு அவனுகளாவே ஒரு யூகத்துக்கு வந்து முடிவும் பண்ணிடுவானுங்க…!

ஜோ

சிலிண்டர் விலை கூடுறப்பலாம், ஆயில் கம்பெனிகாரனை கை காட்ட வேண்டியது,
ரூ.200 குறைஞ்சா அதுக்கு உங்க பேர போட்டுக்க வேண்டியது..

memes and trolls update kumaru
black cat 2

ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்..
இது மாதிரி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லுவாரா

memes and trolls update kumaru
லாக் ஆப்-

சிலிண்டர் விலை குறைப்பு… பாஜகவின் தேர்தல் பாசம்: காங்கிரஸ் விமர்சனம்!

மகளிர் உரிமைத் தொகை : பான் – ஆதார் இணைக்காதவர்களுக்குக் கிடைக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share