’இந்தியா’ கூட்டணி ஒரு வழியா வடிவத்துக்கு வந்திருக்குன்னா அதுக்கு அதிமுகதான்ய்யா காரணம்னு டீ கடையில ஒரு சவுண்டு கேட்டுச்சு. என்னடா இது… புது புரளியா இருக்கேனு திரும்பிப் பார்த்தேன். கரை வேட்டி கட்டிக்கிட்டு கெத்தா உக்காந்து டீ குடிச்சுக்கிட்டிருந்த அந்த ரத்தத்தின் ரத்தத்தைப் பார்த்து எப்படிண்ணே சொல்றே அப்படினு கேட்டேன்.
‘இன்னிக்கு இந்தியா கூட்டணிக்கு 13 பேரை ஒருங்கிணைப்பாளரா போட்டிருக்காங்கள்ல. அம்மா செத்த பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்னு பதவிகளை உருவாக்குனது அதிமுகதான்யா… அதைப் பாத்துதான் இப்ப இந்தியாவுல ஒருங்கிணைப்பாளர்கள்னு ஸ்டாலினையும் சேர்த்து போட்டிருக்காங்க. அதிமுகவைப் பார்த்து ஸ்டாலின் தான் இந்த ஐடியாவை கொடுத்திருப்பாப்ல….’னு ரொம்பப் பெருமையா பேசினாரு.
‘அடப் பாவிகளா வீணாப் போன ஒரு ஃபார்முலாவை கொடுத்துட்டு அதுக்கு பெருமையும் தேடிக்கிறீங்களே… நல்ல வேள இந்தியா கூட்டணியில இணை ஒருங்கிணைப்பாளர்னு யாரும் இல்லை… இருந்தா அவ்ளோ தான்…’னு சொல்லிட்டு நான் கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க…


சரண்யா
சம்பள தேதி வரும் முன்னே, EMI தேதி வரும் பின்னே…

gurunaatha
ஒரு ஜோக் சொல்லவா தம்பி..
சொல்லுங்க ஜீ..
செஸ்-ல எத்தன காய் இருந்தாலும் அதுல ஒரு காய வச்சுக்கூட நம்மளால சமைக்க முடியாது..

பாக்டீரியா
அவசரபட்டு உண்மை தெரியாம அன்பில் அண்ணன அடிச்சுட்டுட்டமேடா…
: இப்ப அடிக்கலைனா அடுத்த தடவ இத தான் சொல்லி இருப்பாரு… அடிச்சதும் சரி தான், ஆளும் சரி தான்

Mannar & company™
அவன் வந்தானா..?
யாரு சார்?
உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் கவனமா இருங்க,. மெதுவா நடங்க.. கடினமா வேலைய பாக்காதீங்க.. உங்களால முடிஞ்ச வேலையைப் பாருங்க ஏன்னா இது ஒன்பதாவது மாசம்ன்னு சொல்லிகிட்டு வருவானே அவன்தான்!
ஸ
டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி
பொண்ணுங்க தான் மாமியார் மாமனாரை அம்மா அப்பா ன்னு சொல்றதும் பேசுறதும்
எந்த ஆணும் மாப்பிள்ளையா போற வீட்ல அவங்கள அப்பா அம்மானு சொல்றது இல்ல
எல்லாமே ஒரு கோட்டுக்குள்ள தான் இருக்கும் அவங்க பழக்க வழக்கம்.
ஏன்?
நெருங்கி பழகினா மளிகை கடைக்கு அனுப்பிடுவாங்கனு பயம் போல ????????

கடைநிலை ஊழியன்
அப்பாடா இன்னைக்கு ஆபீஸ்க்கு வேகமா கிளம்பியாச்சு..
அங்க ஒருத்தன் இருப்பானே..
டிராபிக் ஜாம்..

லாக் ஆஃப்
இந்தியா கூட்டணியின் விளம்பர தூதர் மோடி தான்: மும்பையில் ஸ்டாலின்
