நான் லட்சியங்களை தூக்கிட்டு வர்றேன்… என்கிட்ட லட்சுமிகளை தூக்கிட்டு வர்றீங்களேனு கேட்டிருக்காரு சீமான். யு ட்யூப்ல அதை ஓடவிட்டுக்கிட்டே, ‘பாருங்க எங்க அண்ணனுக்கு மெர்சலான சிச்சுவேஷன்லயும் நக்கலா வசனம் வருது’னு தம்பி ஒருத்தர் ஆபீஸ்ல தாறுமாறு செஞ்சாரு. அப்ப நான், ‘என்னாப்பா… முப்பாட்டன் போல முப்பாட்டிகள்ல மூணாவது பாட்டி பேரு என்னானு கேட்டேன். தம்பி டப்புனு பேஜார் ஆகி ரிவர்ஸ் ஆயிட்டாப்ல…
நீங்க அப்டேட் பாருங்க

Dr.Aravind Raja
ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கிறேன்..
தமாகாவின் ஒரே தலைவரும் ஒரே ஒரு தொண்டருமான ஜி.கே. வாசன் அதிரடி அறிவிப்பு.

குருநாதா
நான் வேலைக்கு சேர்ந்த மொத நாளே எங்க ஓனர் எனக்கு கார் குடுத்தாரு..
செம ப்ரோ. என்ன வேலை பாக்குறீங்க?
ஒனருக்கு ட்ரைவரா இருக்கேன் ப்ரோ.’

கடைநிலை ஊழியன்
மாசம் பொறந்தா சம்பளம் வரும் னு எல்லாரும் சந்தோஷ படுறாங்க..
நமக்கு சம்பளம் வரதும் தெரிய மாட்டிங்குது.. போறதும் தெரிய மாட்டிங்குது…

குருநாதா
ஆபிஸ்ல ஆக்டிவ்வா இருக்கவன விட ,ஆக்டிங்கா இருக்கவன்
ஈசியா ஜெயிச்சுறான்..!!!

ArulrajArun
சீமானைவிட அதிக வாக்குகள் வாங்குவேன் – அண்ணாமலை
# எனக்கும் எங்க அண்ணனுக்கு தான் போட்டி , பின்னாடி ட்ரெயின்ல எங்க பெரிய அண்ணே நோட்டா ஒருத்தர் இருக்காரு

ℳsd ❝இதயவன்❞
இந்தியாவே அறிவாலயத்தின் வாசலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது ~ திமுக எம். பி திருச்சி சிவா
I N D I A கூட்டணியை சொல்றாரு போல ஏன் கூட்டணி எதுவும் மாற போறீங்களா?!

நாகராஜா சோழன் MA MLA
கடவுள் இருக்காண்ட நமக்கும் நல்லது நடக்கும் …
Meanwhile கடவுள் ~
பச்ச மண்ணா இருக்கியே…
ஏன்டா இன்னுமாடா என்னைய நம்பீட்டு இருக்க ?

balebalu
ஏண்ணே அவனை அடிக்குறீங்க?
ஒரே நாடு ஒரே தேர்தல் ன்னு சொல்லுறாங்களே
அப்போ வாக்காளர்களுக்கு ஒரே ஒரு தடவை தான் பணம் தருவாங்களா ன்னு கேக்குறாம்ப்பா
சரவணன். ????
சொன்னாலும் கேட்பதில்லை..
கன்னி மனதா மாப்ள..
கன்னி மனதா, என் பொண்டாட்டி மாமா.

SJB
என் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது- கமல்ஹாசன்
விடுங்க ஆண்டவரே அவங்களுக்கு என்ன புரியவா போகுது.
— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi) September 2, 2023
லாக் ஆப்
