பெட்ரோல் டீசல் மாதிரி டாஸ்மாக் சரக்கையும் தினந்தோறும் ஏத்திக்கிட்டா இருந்தா நல்லா இருக்கும். ஆனா அதை செய்ய இந்த அரசுக்கு துணிச்சல் இருக்கானு இன்னிக்கு பெட்ரோல் பங்க்ல ஒருத்தர் நல்ல சத்தமா கேட்டுக்கிட்டிருந்தாரு. நான் உடனே அவர்கிட்ட, ‘உனக்கு துணிச்சல் இருந்தா இதை போயி டாஸ்மாக் கடையில நின்னு கேளேன்’ அப்படினு சொன்னேன். டேங்கர் மூடியையும் வாயையும் மூடிக்கிட்டு போயிட்டார்.
நீங்க அப்டேட் பாருங்க…
**amudu**
திமுகவையும், மின்வெட்டையும் பிரிக்க முடியாது. -நத்தம் விஸ்வநாதன்.
மின்வெட்டும், அணிலும் போலவா.
**பர்வீன் யூனுஸ்**
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் இருப்பது ஒரு pen.
**ச ப் பா ணி**
டெல்டா பிளஸ்ஸும்
பெட்ரோல் நூறு பிளஸ்ஸும்
மக்களை பயமுறுத்தக் கூடியவை
**balebalu**
சுற்றுலா துறையை ஊக்குவிக்க கடன் – மத்திய நிதி அமைச்சர்
பெட்ரோல் , டீசலுக்கே கடன் வாங்கித்தான் போடணும் போல இதுல எங்க சுற்றுலா போகுறது
**தர்மஅடி தர்மலிங்கம்**
உத்தர பிரதேம், உத்தரகாண்ட் மாநிலங்களில் தனித்துப் போட்டி- மாயாவதி அறிவிப்பு!
ஒருவேளை.. கொரோனாவை கருத்தில் கொண்டு தனித்து போட்டியிடுறாங்களோ..?!
**amudu**
பாமக சார்பில் 14-வது ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு.
கடைசி வரைக்கும் இப்படி நிழல் நிதிநிலை அறிக்கை தானா.
**ச ப் பா ணி**
ஒவ்வொரு விடை கண்டுபிடித்த கணக்கின் பின்னாலும்..
கடைசி பக்க கிறுக்கல்கள் இருக்கும்
**தர்மஅடி தர்மலிங்கம்**
அணில் விஞ்ஞானி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் – செல்லூர் ராஜூ!
தெர்மாகோல் விஞ்ஞானியே சொன்ன பிறகு கொடுத்து தான ஆகனும்!
**பர்வீன் யூனுஸ்**
கமல் கட்சி ஆபீசில் தான் சமூக இடைவெளியை முறையா கடைபிடிக்கறாங்க. மொத்தமே ஆறேழு பேர் தான் இருக்காங்க.
**மயக்குநன்**
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால்தான் நாளைய தலைமுறைக்கு வலிமை!- முதல்வர் ஸ்டாலின்.
அப்பாடா… ஒருவழியா ‘வலிமை அட்டேட்’ கிடைச்சுடுச்சு..!
**கோழியின் கிறுக்கல்!!**
வீட்டு நீதிமன்றத்தில், தண்டனைக்கு பிறகே விசாரணை!!
**-லாக் ஆஃப்**