காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேகதாது அணையை (Mekedatu Dam) கட்டுவதில் கர்நாடகா மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேகதாது அணை கட்டுமானப் பணிகள் தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியதாவது:
- உச்சநீதிமன்றம் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளதால் 2 மாதங்களில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.
- மேகதாது அணை கட்டுமானத்துக்கான திட்ட செயலக அலுவலகம், ராமநகரில் திறக்கப்படும்.
- மேகதாது அணையால் மூழ்கும் வனத்துறை நிலத்தின் அளவும் அதற்கு இணையாக வேறு பகுதியில் ஒதுக்கப்படும் நில அளவும் குறித்து முடிவு செய்ய வேண்டும்.
- மேகதாது அணை திட்ட பணிகளை செயல்படுத்த மாண்டியா அல்லது பெங்களூர் தெற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்குது குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறினார்.
