கடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையத் மறைந்தார். அதன்பிறகு, அவரது மகள் மெகபூபா ஆட்சியமைக்க தாமதப்படுத்திக்கொண்டே இருந்ததன் காரணமாக, காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் பிரதமரைச் சந்தித்தார் பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா. அதன்பிறகு, பிடிபி மற்றும் பாஜக கூட்டணியே தொடரும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பிடிபி கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில், பிடிபி-யின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மெகபூபாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். அதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மெகபூபா அரசுக்கு ஆதரவளிப்பதாக ஒருமனதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று ஆளுநரைச் சந்திக்கும் மெகபூபா, விரைவில் ஆட்சியமைப்பார் என்று தெரிகிறது.
