ஜி.கே.மணியை சந்தித்த அன்புமணி… அடுத்தது?: ராமதாஸ் பேட்டி!

Published On:

| By Kavi

Meeting with Anbumani soon Ramadoss

அன்புமணியை விரைவில் சந்திப்போம் என்று ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். Meeting with Anbumani soon Ramadoss

சென்னை கிண்டியில் பாமக துணை பொதுச் செயலாளர் ஏகே மூர்த்தி இல்லத் திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து பாமக தலைவர் அன்புமணியும் அவரது மனைவி சவுமியாவும் மணமக்களுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்தினர்.

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். அப்போது அன்புமணியும் ஜி.கே.மணியும் சந்தித்து கைகுலுக்கி சிறிது நேரம் பேசினர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக, சென்னையில் இருந்து இன்று (ஜூலை 15) தைலாபுரம் கிளம்பிய ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்

அன்புமணியும் ஜி.கே.மணியும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்?

ADVERTISEMENT

என்ன பேசினார்கள் என்று கேட்டுவிட்டு சொல்லட்டுமா…

அம்மா சின்னய்யாவை சென்று பார்த்து வந்துள்ளார்?

இந்த கேள்வியே தப்பு… அம்மா பிள்ளையை சந்திக்கலாம்… பிள்ளை அம்மாவை சந்திக்கலாம். இது சகஜமான ஒன்றுதான்.

உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

காத்திருப்போம்… காத்திருப்போம் காலங்கள் வந்துவிடும்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது… உங்களுடையே மோதல் போக்கும் தொடர்கிறது?

4 நாட்கள் தொடரும்… பின்னர் சரியாகிவிடும்…விரைவில் சந்திப்போம் என்று கூறினார் ராமதாஸ்.Meeting with Anbumani soon Ramadoss

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share