‘நன்றி கடவுளே; நான் கல்யாணம் செய்துக்கல ‘- கணவர் கொலையை கண்டு பதறிய சாமியார்

Published On:

| By Kumaresan M

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள பிரம்பூரி பகுதியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். 35 வயதான இவருக்கு முஸ்கன் ரஸ்தோகி என்ற மனைவி மற்றும் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். கடந்த 2016-ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்கள் அங்குள்ள அபார்ட்மென்டில் வசித்துள்ளனர்.Meerut husband Murder Case

சவுரப் ராஜ்புத் மெர்ச்சன்ட் கப்பலில் பணிபுரிகிறார். லண்டனில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் மகளின் பிறந்த நாளை கொண்டாட மீரட் வந்துள்ளார். இதற்கிடையே, முஸ்கனுக்கு ஷகீல் சுக்லா என்ற மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், கணவர் திரும்பி வந்ததால், ஷகீலுடன் உறவை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த முஸ்கன் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவர் சவுரப்பை கொலை செய்துள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து உடலை 15 துண்டுகளாக வெட்டி, டிரம்மில் சிமென்ட் கலவையில் போட்டு பூசி விட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.Meerut husband Murder Case

இந்த கொடூர சம்பவம் பற்றி மீரட்டிவ் பகேஷ்வரா பாபா என்ற சாமியாரிடத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘நல்ல வேளை நான் கல்யாணம் செய்துக்கலப்பா’ என்று சிரித்தபடியே அவர் கூறியதாவது, “இப்போது ப்ளு டிரம் இந்தியாவில் பாப்புலராகி விட்டது. கணவர்கள் அதிர்ந்து போய் கிடக்கின்றனர். தம்பதிகள் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றி குடும்ப வாழ்க்கையை சிதைத்துக் கொள்கின்றனர். பண்பட்ட குடும்ப அமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு ராமரின் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share