மதிமுக இனி வேறு கட்சி சின்னத்தில் போட்டியிடாது.. துரை வைகோ திட்டவட்டம்!

Published On:

| By Mathi

Durai Vaiko Press Meet

மதிமுக (MDMK) இனி எந்த ஒரு கட்சியின் சின்னத்திலும் போட்டியிடாது என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ (Durai Vaiko) அறிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று ஜூன் 4-ந் தேதி செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியதாவது: ஒரு கொடியும் சின்னமும், ஒரு கட்சியுடைய, இயக்கத்துடைய அடிப்படை அடையாளங்கள். அப்படி இருக்கும் பொழுது, ஒரு இயக்கம் தன்னுடைய சின்னத்துல இல்லாம, இன்னொரு இயக்கத்துடைய சின்னத்துல நிக்கிறது வந்து, அது வந்து தன்னுடைய தனித்துவத்தை அது இழக்குது.

ADVERTISEMENT

வேற கட்சி சின்னத்தில் போட்டியிடுவதால்..

அதுமட்டுமில்லாம, முக்கியமான விஷயம் நான் இப்ப சொல்ல விரும்புறேன்.. அது என்ன விஷயம்னா, சின்னம் மாத்திரம் பிரச்சனை கிடையாது இதுல. இப்ப ஒரு, ஒரு கட்சியோட வேட்பாளர் இன்னொரு கட்சி சின்னத்துல நிக்கும் பொழுது, அந்த இயக்கத்தை முதல்ல… எந்த கட்சியை சார்ந்தவரோ, அதை முதல்ல ராஜினாமா பண்ணனும். அடிப்படை உறுப்பினர்ல இருந்து ராஜினாமாவை பண்ணிட்டு, எந்த கட்சி சின்னத்துல போட்டி போடுறாரோ, அந்த கட்சியுடைய உறுப்பினரா முதல்ல அவர் மாறணும். மாறிட்டு, அதுக்கப்புறம்தான் அந்த கட்சி சின்னத்துல போட்டி போடணும். தயவுசெய்து தெரிஞ்சுக்கோங்க, சின்னம் மாத்திரம் கிடையாது. அவருடைய, எந்த இயக்கத்தை சார்ந்தவரோ, அந்த இயக்கத்திலிருந்து ராஜினாமாவை பண்ணிட்டு இன்னொரு இயக்கத்துல அவர் போட்டி போடணும். இது ஜனநாயகமாங்குறது என்னுடைய கேள்வி.

உதயசூரியனில் போட்டியிட நிர்பந்தம்

‘அப்புறம் ஏன் நின்னீங்க?’ என்று கேட்கலாம். நாங்க கிட்டத்தட்ட 10 வருஷமா இந்த கூட்டணியில நாங்க தொடர்றோம். தேர்தல் நேரத்துல, கடைசி நேரத்துல, இது ஒரு சர்ச்சையாகி… நாங்க பிடிவாதமா இருந்தோம்.. அந்த ஒரு கருத்து வேறுபாட்டின் காரணமாக நாங்க வெளிய வந்தா, அதனால ஒரு சர்ச்சை வர வேண்டாம், கூட்டணி தலைமைக்கு ஒரு கஷ்டத்தை உருவாக்க வேண்டாம் என்ற நாங்க உதயசூரியன் சின்னத்துல போட்டியிட வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

நான் சொன்னது தொண்டர்களுடைய நிர்வாகிகளுடைய மன வேதனையை.. ‘எங்களுடைய துரதிர்ஷ்டம்’ என்று நான் சொன்னேன். ‘நான் இது தவறு’ என்று சொல்லவே மாட்டேன் நான். இதை ஆயிரம் முறை நான் சொல்லுவேன்.. சொந்த கட்சியின் சின்னத்துல மட்டும்தான் போட்டியிட வேண்டும்.

ஒரு இயக்கம் இன்னொரு இயக்க சின்னத்துல போட்டி போடக்கூடாதுங்க. எங்களுடைய பொதுக்குழுவுல, தலைமை விரும்புதோ இல்லையோ, என்னுடைய ஒரு முக்கியமான கோரிக்கை, எங்க இயக்கத்தில் இருக்கும் அத்தனை பேருடைய முக்கியமான கோரிக்கையா இருக்கும்.

ADVERTISEMENT

கூட்டணி ஆட்சி நல்லதுதான்

கூட்டணி ஆட்சிங்குறது ஒரு Collective Responsibility.. அது நல்ல விஷயமா பார்க்கிறேன். ஒரு… ஒரு கூட்டணி இருக்கும்போது, ஒரு இயக்கம் தவறு செய்யுதுன்னு வச்சுக்கோங்க, இல்ல ஒரு அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குது, அதுல ஒரு மக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு இருக்குன்னா, கூட்டணி இருக்கும்போது அதைத் தட்டிக்கேட்பதற்கும், அதைத் திருத்துவதற்கும் ஒரு அதிக வாய்ப்புகள் இருக்கிறதுனால, ஒரு Collective Decision Making.. Collective Responsibility இருக்கும்போது, கண்டிப்பா அதுக்குண்டான ஒரு நல்ல விஷயமா பார்க்கிறேன். அரசாங்கத்துக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லதா பார்க்கிறேன் நான். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share