சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக மதிமுக (MDMK) பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) உள்ளிட்ட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடை அணிவித்தும், அவரை சனாதனி என்றும் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆளுநர் அர்லேகர் தமது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை மதிமுக இன்று ஜூன் 7-ந் தேதி நடத்துவதாக அறிவித்தது.
இப்போராட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஆளுநர் அர்லேகர் தமது செயலுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், “வெளியேறு! வெளியேறு! ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!” என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகையிட சென்றதாக வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஆளுநர் அர்லேகரை ஆளுநர் மாளிகையில் இருந்து தூக்கி எறிவோம்” என ஆவேசமாக தெரிவித்தார்.
