ADVERTISEMENT

சட்டமன்றத் தேர்தலில் என்ட்ரி… அமைச்சர் சேகர்பாபுவுக்கு மேயர் பிரியா கொடுத்த ஷாக்!

Published On:

| By Aara

சென்னை மேயர் பிரியா ராஜன் பொதுவாகவே அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சை கேட்பவர், அவருடைய கட்டுப்பாட்டுக்குள் செயல்படுபவர் என்ற கருத்து மாநகராட்சிக்குள் மட்டுமன்றி அரசியல் வட்டாரங்களிலும் வெளிப்படையாகவே பேசப்படுகிறது.

அமைச்சர் சேகர்பாபுவும் மேயர் பிரியாவும் சேர்ந்து கலந்து கொள்ளும் பத்திரிகையாளர் சந்திப்புகளில்… மேயருக்கு உரிமையாக கட்டளை பிறப்பிப்பது அமைச்சர் சேகர்பாபுவின் இயல்பாகவே இருக்கிறது. .Mayor Priya shock to Minister Shekar babu

ADVERTISEMENT

இந்த நிலையில் தன்னை மேயராகக் கொண்டு வந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கே ஒரு வகையான அரசியல் ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் மேயர் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

என்ன என விசாரித்த போது,

ADVERTISEMENT

‘சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியல் சமுதாய பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த நிலையில்… தனக்கு மிகவும் கட்டுப்பாடாக இருப்பார் என சேகர்பாபுவால் கருதி இந்த உயர் பதவிக்குக் கொண்டுவரப்பட்டவர் தான் மேயர் பிரியா. Mayor Priya shock to Minister Shekar babu

கிட்டத்தட்ட 3 வருடங்கள் மேயராக இருந்திருக்கும் நிலையில் இப்போது அமைச்சருக்கு எதிராகவே சில காய் நகர்த்தல்களை ஆரம்பித்திருக்கிறார் மேயர் பிரியா.

ADVERTISEMENT

வருகிற சட்டமன்றத் தேர்தலில் சென்னைக்கு உட்பட்ட ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பதுதான் மேயர் பிரியாவின் விருப்பம்.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி மேயராக இருந்த ஸ்டாலின், இப்போது முதலமைச்சராக இருக்கிறார். ஏற்கனவே மேயராக இருந்த மா. சுப்பிரமணியன் இப்போது அமைச்சராக இருக்கிறார். இந்த வரிசையில் சட்டமன்ற உறுப்பினர், சென்னை திமுகவின் இளைய பெண் முகம், அதிர்ஷ்டம் அடித்தால் அமைச்சர் என தனது அடுத்த கட்ட பயணம் பற்றிய, அரசியல் கணக்கில் இருக்கிறார் மேயர் பிரியா.

இதற்காக எந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என ஆலோசனை நடத்தி, சென்னை திரு வி க நகர் சட்டமன்ற தொகுதியை குறி வைத்து இருக்கிறார் பிரியா.

திரு வி க நகரில் இப்போது அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளரான தாயகம் கவி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் கட்சியின் துணை அமைப்பு செயலாளரும் கூட.

இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருவிக நகர் சட்டமன்ற தொகுதியை தனக்கு வழங்குமாறு அமைச்சர் சேகர்பாபு மூலமாக முயற்சிக்காமல், அவரைத் தாண்டி வெவ்வேறு திசைகளில் இருந்து கட்சி தலைமையிடம் லாபி செய்து வருகிறார் மேயர் பிரியா.

மேயர் பிரியாவின் இந்த முயற்சியும் அதற்காக துணை முதல்வர் உதயநிதி வரையில் அவர் மேற்கொண்டுள்ள லாபியும் அமைச்சர் சேகர்பாபுவையே அதிர வைத்திருக்கின்றன” என்கிறார்கள் சென்னை திமுக வட்டாரத்தில். Mayor Priya shock to Minister Shekar babu

இதுதான் அரசியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share