சிறுமி மீதும் தப்பு உள்ளது… பாலியல் வன்கொடுமை வழக்கில் மயிலாடுதுறை ஆட்சியர் சர்ச்சைப் பேச்சு!

Published On:

| By Kumaresan M

சீர்காழி அருகே அங்கன்வாடிக்குப் படிக்கச் சென்ற மூன்றரை வயது சிறுமியிடம் அத்துமீறிய 17 வயது சிறுவனைக் கைது செய்த போலீசார், தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கூலித் தொழிலாளி ஒருவரின் மூன்றரை வயது மகள், அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்துள்ளார்.mayiladudurai collector speach

சில நாட்களுக்கு முன்னர், மதியம் உணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற சிறுமி காணாமல் போனார். சிறிது நேரம் கழித்து அங்கன்வாடி கட்டடத்துக்குப் பின்புறம் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, சிறுமி தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அங்கன்வாடி பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சிறுமியை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். ladudurai collector speach

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 17 வயது சிறுவனை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது, அலறியதால் செங்கல்லை எடுத்து தலையில் அடித்து விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. தொடர்ந்து, சிறுவன் கைது செய்யப்பட்டு தஞ்சை சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் குறித்த ஒரு நாள் திறன்வளர்ப்பு கூட்டம் மயிலாடுதுறையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மயிலாடுதுறை ஆட்சியர் மகா பாரதி பேசுகையில், “சிறுமியின் குடும்பத்துக்கும் சிறுவனின் குடும்பத்துக்கும் முன்பகை இருந்துள்ளது. இதன் காரணமாக, அந்த சிறுமி சிறுவன் முகத்தில் காலையில் எச்சில் துப்பியுள்ளார். இதுதான், இந்த சம்பவத்துக்கு காரணம். இரண்டு பக்கமும் பார்க்க வேண்டியதுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை ஆட்சியரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

mayiladudurai collector speach

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share