தேர்தலில் போட்டி… நிர்மலா சீதாராமனுக்கு சுப்பிரமணியன் சுவாமி பதில்!

Published On:

| By Selvam

தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணமில்லை என்பதால் மறுத்து விட்டேன் என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக மோடியிடம், நிர்மலா சீதாராமன் பணம் கேட்டிருக்கலாம் என்று  சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து “நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா?” என்று கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் “என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது” என்றார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமி எக்ஸ் பக்கத்தில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23-க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ராஜ்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியன் நாடு : அவங்க தேர்தலை தெரிஞ்சுக்குவோமா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… பனீர் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?

LSGvsPBKS : மாற்றப்பட்ட கேப்டன்… முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share