மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று (மே 2) தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிதா அமலாக்கத்துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவின் மீது சிபிஐ வழக்கும் இருந்ததால், சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. சிபிஐ விசாரணை நிறைவடைந்ததையடுத்து, கவிதா தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி கவிதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் நட்சத்திர பேச்சாளராக உள்ள நான் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசின் சதியால் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் நான் இணைக்கப்பட்டுள்ளேன். என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த ஜாமீன் மது மீது பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸிற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தைத் கேட்டறிந்த சிறப்பு நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
அதேசமயம், அமலாக்கத்துறை வழக்கில் கவிதா தாக்கல் செய்திருக்கும் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate : மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?