உலக கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்த அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாஹலுடன் ஒப்பிடும்போது எதிரணிக்கு சவால் அளிக்கும் சுழல் பந்துவீச்சு, பேட்டிங் வரிசை குல்தீப் தேர்வுக்கு காரணமாக இருந்தது.
சஞ்சு சாம்சன் சப்ஜூட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டங்களை மேற்கொண்டாலும் அவருக்கு தேசிய போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த இடம் கிடைக்கவில்லை.
தனது சிறப்பான பேட்டிங் மூலம் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பை அல்லது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் கூறும்போது, “உலக கோப்பை போட்டியில் திலக் வர்மா, சாஹல், குல்தீப் ஆகியோரை புறக்கணிக்க வேண்டும். அக்சர் பட்டேல், ரவிந்திர ஜேடாஜாவின் சுழல் எதிரணிக்கு சவாலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேத்யூ ஹைடன் விரும்பும் இந்திய அணி வீரர்கள் தேர்வு
ரோகித் (சர்மா கேப்டன்), பும்ரா, விராட் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயஸ், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், அக்சர் பட்டேல்.
செல்வம்