பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் 20,691 பேர் சதம் கண்டுள்ள நிலையில், தமிழ் மொழி பாடத்தில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் இன்று (மே 10) காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதில் மொத்தம் 8,18,743 என 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு (91.39%) 10ஆம் பொதுத்தேர்வு தேர்ச்சியை விட 0.16 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த நிலையில் பாட வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரம் :
1. தமிழ் மொழி பாடம் – 8
2. ஆங்கிலம் – 415
3. கணிதம் – 20,691
4. அறிவியல் – 5,104
5. சமூக அறிவியல் – 4, 428
மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் படி அரியலூர் மாவட்டம் 97.31 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிவகங்கை (97.02%), ராமநாதபுரம் (96.36%), கன்னியாகுமரி (96.24%), திருச்சி (95.23%) மாவட்டங்கள் முறையே டாப் 5 இடங்களை பிடித்துள்ளன.
அதே வேளையில் வேலூர் மாவட்டம் 82.07 சதவீதத்துடன் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது. அதனையடுத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
MI, PBKS அணிகள் நாக்-அவுட்: பிற அணிகளுக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு என்ன?
10-ம் வகுப்பு ரிசல்ட் : மாணவர்களை முந்திய மாணவிகள்… தேர்ச்சி சதவீதம் என்ன?