மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தை எதிரொலிக்கும் என்கிற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜுன் 1 ஆம் தேதி வெளியான எக்சிட் போல் முடிவுகளால் இன்றைய (ஜூன் 3) பங்குச் சந்தை புதிய உயரத்தை எட்டியிருக்கிறது.
ஜூன் 3 ஆம் தேதி திங்கள்கிழமை காலை ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் முன்னேறிய நிலையில், எக்சிட் போல் முடிவுகளில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்கிற செய்திகள் காரணமாக இந்திய பெஞ்ச்மார்க் குறியுடுகள் சென்செக்ஸ் 2038.75 புள்ளிகள் உயர்ந்து 76,000.06 புள்ளியிலும், நிஃப்டி 620.80 புள்ளிகள் உயர்ந்து 23,151.50 புள்ளியிலும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 பைசா உயர்ந்து 82.99 ஆக இருந்தது, ஜுன் 1 வர்த்தக முடிவில் 83.46 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலை வர்த்தகத்தில் அதானி போர்ட், கொச்சின் ஷிப்யார்டு, ஹீரோ மோட்டார் கார்ப் மஹிந்திரா அண்டு மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் உயர்வுடன் தொடங்கியது
வரும் வார்த்தைப் பொறுத்த வரை தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலேயே பங்குச் சந்தை போக்கு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. உலகளவில் சீனா மற்றும் அமெரிக்காவின் மேக்ரோ பொருளாதார தரவுகளும் சந்தை போக்கை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஜூன் 7ம் தேதி ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கொள்கை முடிவுகள் வெளிவர உள்ளது கவனிக்கத்தக்கது.
தான்சானியாவில் உள்ள முக்கிய துறைமுக பராமரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதானி போர்ட் நிறுவனம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 1 வர்த்தகத்தில் அதானி நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளும் அசுர வளர்ச்சியை கண்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் அதானி நிறுவனத்தின் கௌதம் அதானி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் பட்டியலில் மீண்டும் இணைந்துள்ள நிலையில் வருகிற வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் விலை உயர வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்த வாரத்தில் Kronox Lab Sciences, Sattrix Information Security, and Magenta Lifecare நிறுவனங்களின் IPOக்கள் சந்தைக்காக திறக்கப்பட்ட உள்ளது.
ஜூன் 3ம் தேதி Vilas Transcore, ஜூன் 4ம் தேதி Ztech India, ஜூன் 6ம் தேதி Aimtron Electronics, ஜூன் 7ம் தேதி TBI Corn நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
ஜூன் 3 வர்த்தகத்தில் அதானி என்டெர்பிரைசஸ்,Bharat Electronics Limited, State Bank of India,Sundaram Fasteners,REC Ltd,BHEL,IRCON,Great Eastern Shipping Company,NHPC, NTPC,ரத்னமணி மெட்டல், ஹொனாசா நுகர்வோர், GE ஷிப்பிங், ஜே&கே வங்கி மற்றும் மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்,ஹிந்துஸ்தான் ஜிங்க், சோலார் இண்டஸ்ட்ரீஸ், சோபா, சிக்னேச்சர் குளோபல் (இந்தியா), எம்&எம், மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
Jindal Stainless, Adani Power, Godawari Power, Jupiter Wagons, Blue Star, and KNR Constructions நிறுவனங்கள் கடந்த ஜூன் 1 வர்த்தகத்தில் 52 வார புதிய உச்சத்தை அடைந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த பங்குகள் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.