ஒரே நாளில் 5 இடங்களில் நகை பணம் திருட்டு – முகமூடி கொள்ளையன் கைது!

Published On:

| By Minnambalam Desk

mask man theft arrested in kovai

கோவையில் ஒரே நாளில் 5 இடங்களில் நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முக மூடி கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். mask man theft arrested in kovai

கோவை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் கடந்த 9ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அவர் மனைவி எழுந்து பார்த்த போது படுக்கை அறையை திறந்து 10 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சாமுவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே பகுதியில் வீடுகள், கடைகள் என நகை, பணம் திருடப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதில் முறையான புகார்கள் வராததால் வழக்கு பதிவாகவில்லை.

ADVERTISEMENT

பெரியகடை வைசியாள் வீதியில் உள்ள நகைக்கடையில் ஷட்டரை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. கடையை திறக்க சென்ற போது ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் பட்டு ராஜா எபிநேசர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்ட போது முகமூடி அணிந்த நபர் வீட்டை சுற்றி வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சென்னையை சேர்ந்த முகமூடி கொள்ளையனைக் கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share