தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக நாளை (நவம்பர் 21) 5 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
கவின் – ஆண்ட்ரியா இணையும் ‘Mask’
விகர்ணன் அசோக் இயக்கத்தில், நடிகர் கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் உருவாகியுள்ள ‘Mask’ திரைப்படம், ஒரு டார்க்-காமெடி த்ரில்லராக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் மர்மமும் திருப்பங்களும் இந்தப் படத்தில் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் ‘தீயவர் குலை நடுங்க’
ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு அதிரடி க்ரைம் த்ரில்லராக வெளியாகிறது.
‘Middle Class’
முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடிப்பில், கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள ‘Middle Class’ திரைப்படம், குடும்ப உறவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளைப் பேசும் ஒரு எதார்த்தமான நாடகமாக வெளிவருகிறது.
‘Yellow’
பூர்ணிமா ரவி மற்றும் டெல்லி கணேஷ் நடிப்பில், ஹரி மகாதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Yellow’ ஒரு உணர்ச்சிகரமான அட்வென்ச்சர் டிராமா. உறவுகள் மற்றும் சுய கண்டுபிடிப்புகளின் பயணமாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
மீண்டும் ‘ப்ரண்ட்ஸ்’
விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த, சித்திக் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம், பல வருடங்களுக்குப் பிறகு 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் மீண்டும் திரைக்கு வருகிறது.நண்பர்களின் பாசம், நகைச்சுவை, மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் என ‘ப்ரண்ட்ஸ்’ தமிழ் சினிமாவில் அழியாத இடத்தைப் பிடித்த ஒரு திரைப்படம். இந்த படமும் இன்று ரீ ரிலீஸ் ஆகிறது.
