நியூயார்க் டைம்ஸ்-க்கு எதிராக வழக்கு… ரூ.1,500 கோடி இழப்பீடு கேட்கும் பழங்குடி மக்கள்!

Published On:

| By christopher

marubo tribes suit case against newyork times

தங்களை அவதூறாக சித்தரித்து கட்டுரை வெளியிட்டதற்காக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக ரூ.1,500 கோடி இழப்பீடு கேட்டு அமேசான் காடுகளில் வாழும் மருபோ பழங்குடியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். marubo tribes suit case against newyork times

பிரேசிலின் ஆழமான அமேசான் வனப்பகுதியான ஜவாரி பள்ளத்தாக்கில் சுமார் 2,000 பேரைக் கொண்ட மருபோ (Marubo) பழங்குடியினர் வாழந்து வருகின்றனர்.

இவர்களுக்கு எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மூலம் இண்டர்நெட் வசதி எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும், அதை சரியாக பயன்படுத்த தெரியாமல், எப்படி மருபோ பழங்குடியின இளைஞர்கள் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில் அடிமையாகிவிட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டு பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் கடந்தாண்டு கட்டுரை வெளியிட்டது.

இதனையடுத்து மருபோ பழங்குடியினர் குறித்து தவறான வடிவத்தில் பல பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தங்களை அவதூறாக சித்தரித்ததாக கூறி நியூயார்க் டைம்ஸ் பத்திரைகைக்கு எதிராக 180 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,500 கோடி) இழப்பீடு கேட்டு மருபோ பழங்குடியினர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பழங்குடியினருக்கு இணைய இணைப்பைக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்த சமூகத் தலைவர் எனோக் மருபோ கூறுகையில், “நாங்கள் நேர்மையாக வாழும் மக்கள். இண்டெர்நெட் பெற்ற பின்பு அவசர மருத்துவம் மற்றும் குழந்தைகளின் கல்வி உட்பட பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கட்டுரையின் ஆசிரியர் மரூபோ சமூகத்தினருடன் வெறும் 48 மணிநேரம் மட்டுமே செலவிட்டார். எங்களை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ளாமல் தவறாக சித்தரித்து கட்டுரை வெளியிட்டுள்ளார்.

இவை எரிச்சலூட்டுவதாக மட்டுமல்லாமல், இணைய பயன்பாட்டின் விளைவாக மருபோ மக்கள் ஒழுக்கம் தவறிவிட்டனர் என்ற தவறான செய்தி உலக மக்களை எட்டியுள்ளது. இத்தகைய சித்தரிப்புகள் மருபோ மக்களின் கலாச்சாரம், ஒழுக்கம் மற்றும் சமூக நிலைப்பாட்டை நேரடியாக பாதித்துள்ளன” என தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில் ‘இந்த வழக்கை நாங்கள் சட்டபடி எதிர்கொள்வோம்’ என நியூயார்க் டைம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share