அரட்டை அடிக்க ஒப்பந்தம்: திருமணத்தில் நடந்த ருசிகரம்!

Published On:

| By Monisha

கேரளாவில் திருமணம் செய்து கொண்ட மணமகனின் நண்பர்கள் அவரது மனைவியிடம், தங்களது நண்பனை இரவு 9 மணி வரை தங்களுடன் அரட்டை அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

தற்போது நடைபெறும் திருமணங்களில் பல புது விதமான விஷயங்களை நாம் பார்த்து வருகிறோம். இந்த புதுமையான விஷயங்களில் முக்கிய பங்கு என்பது மணமக்களின் நண்பர்களுக்கு உண்டு.

ADVERTISEMENT

நண்பனை அனுமதிக்க வேண்டும்

கேரள மாநிலம் பாலக்காடு, மலையக்கோடு பகுதியைச் சேர்ந்த ரகு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா வங்கி தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

ADVERTISEMENT

இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யப் பெற்றோர்கள் முடிவு செய்து நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்த விழாவில் ரகுவின் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் ரகு திருமணம் செய்யவிருக்கும் பெண்ணிடம் சென்று, எங்கள் நண்பன் தினமும் இரவு 9 மணி வரை எங்களுடன் அரட்டை அடிப்பதற்காக நேரம் செலவிடுவான்.

ADVERTISEMENT

ஆனால் திருமணம் ஆகிவிட்டால் அவை தடைப்பட்டு விடும். எனவே திருமணத்திற்கு பிறகும் ரகுவை எங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஒப்பந்த பத்திரம்

இதற்கு அர்ச்சனாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் ரகு – அர்ச்சனா திருமணம் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி பாலக்காடு கோழிக்கோட்டில் நடைபெற்றது.

அந்த திருமணத்திற்கு வருகை தந்த ரகுவின் நண்பர்கள் கையில் ஒரு 50 ரூபாய் பத்திரத்துடன் வந்தனர். அந்த பத்திரத்தை மணப்பெண்ணிடம் கொடுத்து படித்துப் பார்த்து கையெழுத்திடக் கூறினர்.

அந்த பத்திரத்தில், “எனது கணவன் ரகுவை திருமணத்திற்குப் பிறகு அவரது நண்பர்களுடன் இரவு 9 மணி வரை நேரம் செலவிட அனுமதி அளிப்பேன். போன் செய்து தொல்லை செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதனைப் படித்துப் பார்த்து அர்ச்சனா கையெழுத்திட்டார். பின்னர் இந்த பத்திரத்தை ரகுவின் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

நண்பனின் திருமணத்தில் சக நண்பர்கள் செய்த இந்த காரியம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம், மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனின் நண்பர்கள், தங்களது நண்பனை சனி மற்றும் ஞாயிறுகளில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

மாணவர்களுடன் துபாய் பறந்த அன்பில் மகேஷ்

மாலத்தீவில் தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share