ADVERTISEMENT

கொட்டித் தள்ளிய மழை : குளமாக மாறிய மெரினா கடற்கரை!

Published On:

| By Kavi

சென்னையில் நேற்று முதல் கன மழை பெய்து வருவதால் நகரில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. 

ADVERTISEMENT

வங்கக் கடலில் உருவான டிட்டுவா புயல் வலுவிழந்தாலும் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. 

ADVERTISEMENT

சென்னையை பொறுத்தவரை சேப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஓஎம்ஆர் சாலை என பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 

இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று வரை மழை நீடிக்கும் என்பதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த சூழலில் நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரை மணல் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. கடற்கரை பகுதிகள் கடல் போலவே காட்சியளிக்கின்றன. மெரினா சாலையில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

எனவே மெரினா கடற்கரைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

எனினும் உற்சாக மிகுதியில் கடற்கரை பகுதிகளுக்கு வந்தவர்களையும் போலீசார் அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். 

டிட்டுவா புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரை ஐந்து அடிக்கும் மேல் அலைகள் எழுந்து சீற்றமாக காணப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share