நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இன்று (ஆகஸ்ட் 23) கண்டுகளித்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் வாழை. இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியானது.
முன்னதாக படத்தின் பிரிமீயர் ஷோவை பார்த்த முன்னணி இயக்குனர்கள் மணிரத்னம், பாலா, வெற்றி மாறன், ராம், மிஷ்கின், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் படத்தை மிகவும் பாராட்டியிருந்தனர்.
#Vaalai FDFS with #DirMariSelvaraj ❤️❤️❤️@mari_selvaraj
Oor makal be like, ne vaa #Karna #KarnanClimax sequence happening now here in #RamCinemas ????????????@dhanushkraja you must be able to feel it! ❤️ pic.twitter.com/B4V7M1GKAI
— Ram Muthuram Cinemas (@RamCinemas) August 23, 2024
படம் பார்த்த பாலா, தியேட்டரை விட்டு வெளியே வந்து மாரிசெல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்டார். மேலும், படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீளமுடியாமல் மாரி செல்வராஜின் கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தார். இந்த வீடியோ காட்சிகள் நேற்று (ஆகஸ்ட் 22) சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டானது.
“பாலாவே பயங்கரமான ஆளு… அவரையே கலங்க வச்சிட்டாப்ல மாரிசெல்வராஜ்” என இணையம் முழுக்க நேற்று இதே பேச்சு தான்.
இந்தநிலையில், நெல்லை ராம்சினிமாஸில் வாழை படத்தின் ரசிகர் ஷோ இன்று காலை திரையிடப்பட்டது. இதற்காக மாரி செல்வராஜ் ரசிகர்கள் தியேட்டரில் ‘நம் மண்ணின் மைந்தன் மாரி செல்வராஜ் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்று கட் அவுட் வைத்திருந்தனர்.

இன்று காலை நையாண்டி மேளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வாழை படம் திரையிடப்பட்டது.
மாரி செல்வராஜ் நெல்லை சட்டக்கல்லூரியில் படித்தபோது, ராம் சினிமாஸ் திரையரங்கில் அவரின் ஆதர்ச நாயகன் விஜய்யின் படங்களை பார்த்தார். இன்று அவரது படம் ராம் சினிமாஸில் வெளியாகியிருப்பது மகிழ்ச்சி என்று ராம் சினிமாஸ் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரிசெல்வராஜ், “இது ஒரு வலிமிகுந்த வெற்றி. அதனால் ஆர்ப்பாட்டமாக கொண்டாடமுடியவில்லை. 30 வருடம் கழித்து என்னுடைய எமோஷனலை புரிந்துகொண்ட தமிழ் மக்களுக்கு மிகவும் நன்றி.
தமிழகம் முழுவதும் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. நிறைய இடங்களில் திரையரங்குகள் அதிகரிக்க உள்ளது.
படத்தை பார்த்த பலரும் எமோஷனலாக தங்களது கருத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். நல்ல மனிதர்களின் கதைகளும், எளியவர்களின் வலியும் தோற்காது. காலம் கடந்தும் என்றைக்காவது ஒருநாள் வெற்றி பெறும் என்பதற்கு வாழை ஒரு உதாரணம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடிக்கு பிறகு யார்? ரேசில் முந்தும் அவர்!
செந்தில் பாலாஜி வழக்கு : ஆளுநருக்கு அனுப்பிய கோப்பை சமர்ப்பிக்க உத்தரவு!
