ADVERTISEMENT

மாரி செல்வராஜ் – துருவின் ’பைசன்’ ரிலீஸ் தேதி இது தான்!

Published On:

| By christopher

mari selvaraj bison will release on october 2025

துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக இன்று (மே 3) அறிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். mari selvaraj bison will release on october 2025

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பைசன் (காளமாடன்)

ADVERTISEMENT

கபடி விளையாட்டின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் மற்றும் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த மார்ச் 7ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

அதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், “தீப்பிடித்து எரியும் வனத்திற்குள்ளிருந்து தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான் தெக்கத்தி காளமாடன் (பைசன் )” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளியையொட்டி இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் ரிலீஸ் தேதியை அறிவிக்காத நிலையில், ’பைசன்’ அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share