மார்கழி மாத நட்சத்திர பலன்கள் உத்திராடம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

உழைப்பின் பயனாக உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். அலுவலகத்தில் உடனிருப்போர் ஆதரவு கிட்டும். மேலிடத்தால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் வரலாம். அதில் வெற்றிபெற, சோம்பலை உடனடியாக விரட்டுங்கள்.

ADVERTISEMENT

புதிய முயற்சியாக எடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும். அதேசமயம், வீண் ரோஷம் யாரிடமும் வேண்டாம்.

குடும்பத்தில் நிம்மதி நிலவும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். ஆடை, ஆபரணப்பொருள் சேரும்.

ADVERTISEMENT

செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தில் வீண் சந்தேகம் வேண்டாம். கூட்டுத்தொழிலில் ஆதாயம் உண்டு.

அரசுத்துறையினர் பணியிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம்.

ADVERTISEMENT

அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் யாருக்கும் வாக்குறுதி தரும் முன், ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். செயல்படுங்கள்.

கலைஞர்கள், படைப்புத்துறையினர் சோம்பலை விரட்டுவதில் சோம்பல்படக் கூடாது. மாணவர்கள் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள். இயன்றவரை இரவுப் பயணம் தவிருங்கள்.

கால்கள், அடிவயிறு, முதுகு உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

ரஷ்ய அணுஆயுத பிரிவு தலைவர் குண்டு வைத்து கொலை; மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய உக்கிரம்!

கள்ளச்சாராய மரண வழக்கு : சிபிஐ விசாரிப்பதில் என்ன தவறு? உச்ச நீதிமன்றம் கேள்வி!

சரியாக சிகிச்சையளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? மவுனமும் ஜாமீனும்!

பட்டை தீட்டிய சென்னை… ரூ. 1.60 கோடிக்கு தட்டி தூக்கிய மும்பை : யார் இந்த மதுரை கமலினி?

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share